Skip to main content

அகத்தீ - நம்ம சந்தை - 3

நண்பர்களே வணக்கம். அகத்தி நண்பர்கள் மற்றும் இந்த நிகழ்வில் மூலம் அறிமுகமான தோழர்கள் பெரும் உழைப்பினால் செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மூன்றாவது முறையாக நம் தாம்பரத்தில் அகத்தி தோட்டத்தில் தொடங்கியது. நிகழ்வு தொடங்குவதற்கு முன் நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதாவிற்கும், மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் அவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு நிகழ்வை தொடங்கினோம். எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த சூழியல் செயற்பாட்டாளர் நித்யானந் ஜெயராம் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். மழைக்காலமும் சென்னையும் என்ற தலைப்பில் வந்திருந்த தோழர்களிடம் அருமையாக தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மழைக்காலங்களில் நாம் எப்படி நம்மை தற்காத்து கொள்வது என்பதை பற்றி எடுத்துரைத்தார். தோழர் அன்வர் அவர்களால் விதைப்போம் அறுப்போம் என்ற மின்னணு நூல்(e-book) வெளியிட இளம் விவசாயி நித்யானந் பெற்றுக்கொண்டார்.இதனிடையே இலவச சட்ட உதவிகூடமும், இலவச மருத்துவ முகமும் நடைபெற்றது.
அதன் பிறகு உணவு இடைவேளையில் எங்கள் குழுவை சேர்ந்த கலைவாணி அவர்களின் கைப்பக்குவதால் சமைத்த சிறுதானிய உணவை அனைவரும் சுவைத்து மகிழ்ந்தனர்.பிறகு தோழர் சுரேஷ் அவர்கள் வயிறுநலம் என்ற தலைப்பில் நம்முடன் உரையாடினார். புதுக்கோட்டை ரோஸ் அமைப்பு அவர்களிடம் இருந்து நேரடியாக சிறுதானியம், மரச்செக்கு எண்ணெய்,பாரம்பரிய அரிசி வகைகள், caxton மற்றும் பெருமாள் அவர்களின் கருப்பட்டி திண்பண்டங்கள், பாரிவேல் அவர்களின் சிறுதானிய திண்பண்டங்கள்,அரசு அவர்களின் மண்பாண்ட பொருட்கள்,ஸ்ரீதர் அவர்களின் கீரைகள்,முத்து அக்காவின் அனையடைகள், பரமேஷ் அவர்களின் நாட்டு கீரை மற்றும் காய்கறி விதைகள் மற்றும் புதிதாக நம்முடன் இணைந்த தோழர் அந்தோணி அவர்களின் அனையடைகள்,தோழர் பிரியா அவர்களின் ரசாயினம் இல்லாத பாத்திரம் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.அதே நாளில் குழந்தைகளுக்கான மாதாந்திர ஒன்றுகூடல் நடந்தது. மரபு சார்ந்த விஷயங்களை குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கான ஒரு சிறு முயற்சி. எங்கள் தோழர் தீபாவின் புதல்வன் அகில் வந்திருந்த மற்ற குழந்தைகளுக்கு காகிதத்தில் தொப்பி மற்றும் சில பொருட்களை செய்ய கற்றுக்கொடுத்தான். பிறகு கதை சொல்லுதல்,கேட்டல் மற்றும் சிறு விளையாட்டுகளை கற்றுக்கொடுத்தோம்.
நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் அகத்தி சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வருகை பதிவேட்டில் பொறுமையாக பதிவு செய்த நித்யா அக்கா --,அகத்தியை சுத்தம் செய்ய உதவிய புழல் நண்பர்கள்,ஜெய் தோழர்,கெளதம்,நித்தி, செம்மை நண்பர்கள், நான் இங்கு பதிவிடாமல் விட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
குறிப்பு: நம்ம சந்தை மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த சந்தை 15 ஆவது அக்டோபர்(15/10/2017 ) அன்று நடைபெறும்.























































Comments