Skip to main content

Posts

Showing posts from September, 2022

அகத்தீ ஒன்று கூடுகை

  அகத்தீ-ஒன்றுகூடுகை அகத்தீ அறக்கட்டளையாக பதிவு செய்த பின் , ஒரு ஞாயிறு காலை அக்குழு கூடி அகத்தீயின் செயல்பாடுகள் , அறக்கட்டளையாக பதிவு செய்ய வேண்டிய தேவை , எதிர்கால செயல்பாடுகள் என கலந்துரையாடியது . கிழக்கு தாம்பரத்தில் தோட்டத்துடன் கூடிய ஒரு வீடே அகத்தீ உருவாக காரணம் . அவ்வீடு , பல ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் மாற்று சிந்தனையுடைய இளைஞர்கள் சந்திப்பதற்கும் , தங்குவதற்கும் , விவாதிப்பதற்கும் ஒரு தளமாக அமைந்தது . சமூகம் , பண்பாடு , இயற்கை விவசாயம் , சுற்று சூழல் , தற்சார்பு வாழ்வியல் , அரசியல், சிறார் களம் என பல்வேறு தளங்களிலும் அகத்தீ செயல்படுகிறது . காலநிலை மாற்றத்தாலும் , சமூக - அரசியல் சிக்கல்களாலும் நெருக்கடிக்குள்ளாகும் நம் வாழ்வை அவதானிக்கவும் , மாற்றவும் , முன்னேற்றவும் அகத்தீ போன்ற அமைப்புகளின் தேவையுள்ளது .        சிறுவர்கள் , இளைஞர்கள் , பெண்கள் உள்ளிட்ட சமூகத்தை பல நிலைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை விதைக்கவும் , செயல்திறனை ஊக்குவிக்கவும் அ...
  அகிம்சை சந்தை. ஒரு பொருளின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் முடிவு; இன்றோ அல்லது நாளையோ ; நமக்கோ அல்லது பிறருக்கோ எவ்வகையிலும் பாதிப்பு அளிக்காதவையாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு அளிக்கவே இந்த அகிம்சை சந்தை நடத்தப்பட்டதாக நான் உணர்கிறேன். ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட சந்தையில் ; நான் பொருட்கள் எதையும் நுகரவில்லை ; மாறாக பல்வேறு அனுபவங்களை நுகர்ந்தேன். அவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விற்பனை குடில்கள் (stalls) அங்கு அமைக்கப்பட்டிருந்தன.  இயற்கையான நஞ்சில்லா உணவு பொருட்கள்  கைத்தறி ஆடைகள்  புத்தகங்கள்  இயற்கையான அழகுசாதன பொருட்கள்  குடிசை தொழில் பொருட்கள்  வீட்டை அழகாக்கும் பொருட்கள்  கைப்பைகள்  இயற்கை மண்புழு உரங்கள்  பலகாரங்கள்  மரபு கட்டிட கலை ஆவணங்கள்  வெளி மாநில சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்புகள்  இளம் அரசியல் உணர்வாளர்கள் என என் நினைவில் நிற்காத ஏராளமான பொருட்கள் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தின. தினமும் கருத்தரங்குகள் ,வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்களின் அனுபவ பகிர்வுகள், மாலையில் நிபுணர்களின் சொற்பொழிவுகள் ,கலை நி...
  நாம் முரணோடு வாழ சபிக்கப்பட்டவர்கள்..! திடக் கழிவு மேலாண்மை வகுப்பு நடந்த அன்று அனைவருக்கும் மாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு முடிந்த நிலையில் எனக்கு மட்டும் இரவு 12:30 மணி வரை நடத்தப்பட்டது . உணவு உண்ணும்போது , ஓய்வாக அமரும்போது , உறங்க படுத்து கொண்டிருக்கும்போது என அது பலநிலைகளில் நீண்டது. அதன் புரிதலை கற்பனை மற்றும் பயத்தில் கலந்து இங்கு பதிவிட விரும்புகிறேன். வகுப்பில் நுண்ணுயிரிகளின் அவசியத்தை பற்றியும்; நம்முடைய கழிவுகளை மேலாண்மை செய்வது பற்றியும்தான் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது நாம் வாழும் வாழ்க்கைமுறை அதில் பெரும்பங்கு வகிப்பதால் நான் வகுப்பின் தலைப்பிலிருந்து வெளியேறி கட்டுரையின் தலைப்பில் பயணிக்க தொடங்கிவிட்டேன். வாழ்வின் வெள்ளோட்டத்தில் நாம் அனைவரும் முரண்களுக்கு மத்தியில் வாழப்பழகி உள்ளோம். வளர்ச்சி, நவீனம், ஆடம்பரம் போன்றவற்றை பற்றிக்கொண்டு நாம் முன்னேறுகையில் அவற்றால் ஏற்படும் விளைவுகளை கவனிப்பதில்லை. பூமியின் எதிர்காலம் குறித்து மனதில் உள்ள கவலைகளை வார்த்தைகளில் உருவம் தர முயற்சிக்கிறேன் ஆனால் பேனாவின் முனைக்கு மூளையில் இருந்து உத்தரவு வரவில்லை . ஏனெனில் எதிர்...
  அகத்தீ குடும்பங்களின் ஒன்று கூடுதல். தாம்பரம் அளவில் தொடர்ச்சியாக நஞ்சில்லா உணவு பொருட்களை நேரடியாக விவாசாயிகளிடம் இருந்து வாங்க விருப்பம் உள்ளவர்கள்... சுற்றுசூழல் பாதுகாப்பு, சூழலியல் பயணம், குழந்தைகள் நலன், ரசாயணம் இல்லா வீடு, ஆக்கபூர்வமான சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்கள்... குடும்பமாக இணைந்து நம்பிக்கை அளிக்கும் சமூகமாக உருவெடுத்து வரும் தலைமுறைக்கு முன் உதாரணமாக திகழ சந்திப்போம்... என அ(க)ண்ணண் அழைப்பு விடுத்தபோது பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஒன்று கூடுகை (17/09/22) சனிக்கிழமை அன்று கூட்டப்பட்டது. நஞ்சற்ற உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வுடனும் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலுடனும் அது நடந்தது. "இந்த மாதத்தில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் "என்று கூறியவுடன்; தோழர்கள், தங்களின் எண்ண அலைகளை மடைகளிலிருந்து விடுவித்தனர் . ஒவ்வொருவரும் தனித் தனி கோணங்களில் நின்ற படி தங்களின் சமூகம் சார்ந்த வேதனைகளை பகிர்ந்துகொண்டனர்.  எங்கோ ஒரு முகம் தெரியாத விவசாயிக்கு பொருட்கள் வாங்கி அவர்கள் அளித்த ஆதரவு .  முடிந்தவரை இயற்கையை நோக்...
  வாருங்கள் GEMsஐ வளர்ப்போம்... பேருயிர்களின் வாழ்க்கை சிறக்கவேண்டுமெனில்; நன்மை தரும் நுண்ணுயிர்களின் வாழ்கை முதலில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற புரிதலை திடக்கழிவு மேலாண்மை வகுப்பில் மிகவும் திடமாக எடுத்துக்கூறப்பட்டது. (11/09/22)  உணவுக்கழிவுகளை உரமாக மாற்றி அதை மீண்டும் உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவது ;  கழிவறைகளை எந்நேரமும் பளபளப்பாக வைத்துக்கொள்ள நவீன அறிவியலின் சுத்தப்படுத்திகள் தீய நுண்மிகளை மட்டுமின்றி நல்ல நுண்மிகளையம் சேர்த்து அழிக்கின்றன எனும் விழிப்புணர்வு ;  நன் நுண்மிகளின் பல்வேறு பயன்பாடுகள் ;  இயற்கையான சுத்தப்படுத்தியை எளிமையாக வீட்டிலேயே தயாரிப்பதற்கான பயிற்சி;  வந்திருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட நபர்களின் அனுபவ பகிர்வு ;  தம்மை போன்ற ஒத்த சிந்தனை உடையவர்களுடனான சந்திப்பின் திருப்தி;  பெரியோர் மற்றும் சிறியோர்களின் புதிய நட்புகள் ;  சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்ச்சியாக வருபவர்களின் இடைநிற்றல் ;  ஆசிரியர் ஏன் இயற்கை பற்றாளர் ஆனார் எனும் அனுபவப்பகிர்வு ;  இத்தகைய வகுப்புகள் மற்றும் ஒன்று கூடுகையினால் மக்களை இயற்கையை நோக்கி திருப்பிவிடலாம் எனும் அ(க...
  சிறார்களம் - சுவர் ஓவியம் (9/9/22) வண்ணங்களாய் குடுவையில் கரைந்து ஒவியங்களாய் தூரிகையில் துளிர்த்தபொழுது..... கடந்த வெள்ளிகிழமை சிறார் ஒன்றுகூடுகையும்... சுவர் ஓவியமும் தொடரும் அகத்தீ - 99402 20091