Skip to main content

Posts

Showing posts from July, 2024

அகத்தீ - சந்திப்பும் செயலும் - 'ஆயிஷா' நூல் அறிமுகம்

அகத் தீ -   சந்திப்பும் செயலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த உரையாடல் நிறைவானதாக இருந்தது. "ஆயிஷா" நூல் அறிமுகம் அதையொட்டிய உரையாடலில் குழந்தைகளை பள்ளியில் இருந்து விடுவிப்பது, வீட்டிலேயே சொல்லிக் கொடுப்பது என்ற முடிவுக்கு சமீப ஆண்டுகளாக ஏராளமான பெற்றோர்கள் முன் வந்து உள்ளனர். இதற்கான பல காரணங்களில் ஒன்று பெற்றோர்களுக்கு அவர்கள் மாணவர்களாக பள்ளிக்கூடத்தில் இருந்தபோது கிடைத்த கசப்பான அனுபவங்கள், தற்போதைய கல்வி முறை வாழ்க்கை முறை மீதான அதிருப்தி. இது போன்ற முடிவுகளை முன்னெடுக்கும் போது ஏராளமான சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அப்படி இருக்க இதை பெற்றோராக தீர்மானித்து குழந்தைகள் மீது திணிக்காமல் அது குழந்தைகளின் விருப்பத்தில் இருந்து முடிவெடுக்க வேண்டும். இது பெரும்பாலும் நகரத்தில் வாழும் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவு தன்னிறைவு பெற்ற நடுத்தர குடும்பங்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்பதை சுய விமர்சனத்தோடு பார்க்க வேண்டும். பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை கிராமப்புறத்தில் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் நிலையில் இருந்தும் பார்க்க வேண்டியதின் அவசியம் பேசப்பட்...

அகத்தீ - ஒரு உரையாடல்

அகத் தீ -   ஒரு உரையாடல் கடைசி கட்டத்தில் தீர்மானித்த ஒரு சந்திப்பு. முதல் முறை தமிழ்நாட்டுக்கு வந்த நான்காவது தலைமுறை மலேசியா தமிழர் கௌசல்யாவுடன் மலேசியா தமிழரின் வாழ்நிலை பற்றிய உரையாடல் சிறப்பாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் சிறுமியாக இருந்த போது இன ரீதியான பாரபட்சம், பள்ளிக்கூட ஆசிரியரான பிறகும் தொடர்ந்தை ஒட்டி மலேசியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்நிலையை பற்றி மிகவும் சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார். 02 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை