Skip to main content

Posts

Showing posts from December, 2025

சிறுவர்களுக்கான 'வகுப்பறைக்கு அப்பால் ,,, குறு நாடகங்கள்'

  முற்றம் கலைக்குழு மற்றும் கேள் நாடக குழுவும் இணைந்து தாம்பரம் தகை சமூகம் கூடத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட குழந்தைகள் பற்றிய குறு நாடகங்கள் கடந்த மாதம் 21/12/2025 ஞாயிறு அரங்கேற்றினர். * குழந்தைகளுக்கான வெளி எங்கே போனது ? * சிறுவர்கள் உலகில் நாம் எங்கே இருக்கிறோம் ? போன்ற பல கேள்விகளுக்கான ஒரு முயற்சியாக இந்த நாடகம் இயற்றப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் எப்படிப்பட்டவையாக உள்ளது, மாணவர்கள் எப்படிப்பட்ட கலவையான மனநிலைகளுடன் உள்ளனர், அதில் ஜாதியின் பங்கு என்ன ? என்று நாம் கவனிக்கப்படாத ஆனால் கவனிக்க வேண்டிய பல நிகழ்கால சம்பவங்களை நாடக வடிவில் உயிரோட்டமாக கொண்டு வந்தனர் நாடக கலைஞர்கள். அதன் பிறகு வந்திருந்த பார்வையாளர்களுடன் நடந்த உரையாடல் அதை ஒட்டிய ஒவ்வொருவரின் சொந்த அனுபவபகிர்வும் இது போன்ற நாடகங்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தியதாக அமைந்தது. உரையாடல் தொடரும் கலைகள் அதற்கு வழிவகுக்கும் அகத்தீ 094984 88645

அகத்தீ - குடும்பமாக ஒன்றிணைவோம் !

  இந்த தை 1, தகை சமூக கூடம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை ஒட்டி சென்ற மாதம் 14 / 12 / 25 அன்று ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தோம். நாம் அனைவரும் கூடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நாம் பேசி, பாடி, பகிர ஏராளமாக உள்ளது வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் அவசியம் வாருங்கள் என்றோம். இந்த அழைப்பே கொண்டாட்டமாக மாற, இதன் நெகிழ்வான வெளிப்பாடாக அகத்தீ சிறார்கள் 'தகை' என்று எழுதிய அவர்களே செய்த கேக் கொண்டு வந்திருந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் சமீபத்தில் கடந்து வந்த வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். மிகுந்த பேரன்போடும் அக்கறையோடும் நடந்த இந்த உரையாடல், எல்லா மகிழ்ச்சிகளிலும் சவால்களிலும் ஒவ்வொருவரும் உடன் நிற்கிறோம் என்பதை உணர செய்தது. இந்த தருணங்களே இந்த ஒன்றிணைப்பை பல மடங்கு உயிர் பாக்கியது, அழகாகியது. அகத்தீ https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8

சூழலியல் பயிற்சி பட்டறை

  அகத் தீ - சூழலியல் பயிற்சி பட்டறை மழை வெள்ள பாதிப்பை பற்றி வட சென்னையில் வியாசை தோழர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுடன் ஓராண்டு வெற்றிகரமாக செயல்படுத்திய பயிற்சியின் தொடர்ச்சியே அகத்தீயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காலநிலை செயல்பாட்டு குழு இதை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து ஒருங்கிணைத்ததின் காரணமாக தமிழக அரசின் கவனத்தை பெற்று பரவலாக ஊடகங்களின் செய்தியாகவும் வந்து ஒரு ஆக்கப்பூர்வமான தீர்வை சென்னை மழை வெள்ளங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக மாணவர்கள் இதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து முன்னெடுத்தது இது முதல்முறையாக இருக்கும். ஈரநில ஆய்வாளர் பிரசாந்த் மற்றும் 11வது படிக்கும் தினேஷ் இருவரின் வழிகாட்டுதலில் சிறப்பான அமர்வு நடந்தது (07/12/2025). மிகவும் விரிவாக சென்னை நிலப்பரப்பு, நீர்நிலைகள், மழைக்காலங்கள், நீர் விழிப்பாதைகள், நகரமயமாக்கல், வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் வரைமுறை அற்ற கட்டுமானங்கள் என்று பலவற்றை மாணவர்களுடன் உரையாடி பின்னர் கூகுள் எர்த் ஆப் மூலமாக திசைகள், தூரம், ஆவணப்படுத்துதல் என்று தொழில்நுட்ப உதவியுடன் மழை வெள்ளத்திற்கான காரணங்களை தெரிந்து கொள்ள தொடங்கினார்க...