Skip to main content

Posts

Showing posts from December, 2024

அகத்தீ - வானகம் பயணம்

  அகத் தீ - வானகம் பயணம் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவிடம் கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் புத்தாண்டு அன்று வானகத்தில் தான் இருந்திருப்பர். இந்த முறை வானகம் பயணம் திட்டமிடும்போதே கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொண்டு விட்டது. "நம் கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள்" என்ற தலைப்பில் கடந்த நவம்பர் டிசம்பரில் நடந்த பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்த அகத்தீ மொட்டுக்கள் வானகம் பயணத்தில் பங்கெடுக்க காட்டிய ஆர்வம் திக்கு முக்காட செய்தது. அதற்கு ஏற்றார் போல் 2 நாள் பயணமாக திட்டமிட்டோம். முதல் நாள் உலகத்தில் இரண்டாவது பெரிய அலையாத்தி‌ காடான பிச்சாவரத்தில் படகு சவாரி சென்றோம். போகும் வழியில் வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இருக்கும் வடலூருக்கு சென்று பார்த்தோம். பசியாறுவதற்கு 157 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்றி வைத்த ஆணையா அடுப்பையும் கண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வானகத்திற்கு எப்பொழுது சென்றாலும் தாய் நிலம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின...

அகத்தீ புத்தாண்டு கூடுகை

அகத் தீ புத்தாண்டு   கூடுகை கூட்டு குடும்பங்கள் அரிதினும் அரிதாக மாறிய காலத்தில், அறம் சார்ந்த கல்வி, நஞ்சு இல்லாத உணவு, தற்சார்பு பயணம், ஆரோக்கியமான வாழ்வியல் என்ற தேடலில் தாம்பரம் சுற்றுவட்டாரதில் அறிமுகமான தோழமைகள் ஒரு குடும்பமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கின்றோம். பேரன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆகப்பெரும் விருப்பமாக உள்ளது. எங்கள் சந்திப்பு என்பது எப்போதும் கொண்டாட்டம்தான். இந்த முறை புத்தாண்டை வரவேற்பதற்கான கூடுகையாக இருந்தது. இந்த ஆண்டு நம் கூட்டு செயல்பாட்டை மேலும் அர்த்தமுள்ளதாக்க ஒரு வெளி கிடைக்கப் பெறுவது கூடுதல் மகிழ்ச்சியே. இயற்கையின் அன்பால் இணைவோம் ! அகத்தீ 29/12/2024 வாட்சப் குழுவில் இணைய : https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8

அகத்தீ - திரையிடலும் உரையாடலும் 'குற்றம் கடிதல் படம்

அகத் தீ - திரை யிடலும் உரையாடலும்   குற்றம் கடிதல் படம் திரையிடலும் உரையாடல் 2024 டிசம்பர் 22 ஞாயிறு “குற்றம் கடிதல்” திரைப்படத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இத்திரைப்படம் ஒரு மாணவனை ஆசிரியர் கன்னத்தில் அறையும் ஒரு எதிர்பாராத சம்பவம் பல்வேறு பின்னணியில் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்கிறது. திருக்குறளின் 44வது அதிகாரத்தின் தலைப்பிலிருந்து இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளுவர் குற்றத்தை தவிர்ப்பது பற்றி வலியுறுத்தி உள்ளார். குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்புப் பேச்சாளராக அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அழைக்கப்பட்டிருந்தார். திரைப்படத்தின் எடிட்டர் திரு.பிரேம் மற்றும் பள்ளிக்கரணை தாய்தமிழ் பாவணர் பள்ளியின் அய்யா மாந்தனேயன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்படம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பாரதி தோழரின் வீட்டில் திரையிடப்பட்டது. படத்தின் 121 நிமிடங்கள் பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தனர். படம் பார்த...

அகத்தீ - நீர்நிலைகளை பாதுகாக்க மிதிவண்டி பயணம் - தாம்பரம்

  அகத்தீ- நீர்நிலைகளை பாதுகாக்க மிதிவண்டி பயணம் - தாம்பரம் 2015 டிசம்பர் மழை வெள்ளத்தை நினைவுகூரும் வகையிலும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் கிழக்கு தாம்பரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15 அன்று மிதிவண்டி பேரணி நடந்தது. சிறார்கள் இந்த மிதிவண்டி பயணத்தில் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். மிதிவண்டிக்கு முன்னும் பின்னும் இயற்கை வளங்களை பாதுகாப்பதை வலியுறுத்தி வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மிதிவண்டி பயணத்தை நேர்த்தியாக கொண்டு செல்ல கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை முன்கூட்டியே தெளிவாக பங்கெடுத்த அனைவரிடமும் அறிவிக்கப்பட்டது. சேலையூர் ஏரிக்கு எங்கள் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினோம், ஏரியின் பரப்பளவு எப்படிக் குறைந்துள்ளது என்பதை நேரில் பார்த்தோம். முனைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் நீர் பரவல் பகுதியை எவ்வாறு பாதித்தது என்பதை விளக்கினார். மேலும் பண்டைய காலத்தில் ஏரிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட விதம், மதகுகள் குறித்தும் விளக்கினார். நீரோட்டத்தின் திசையை வைத்து புவியியல் திசைகளைக் கண்டுபிடிப்பதற்கான எளிய வழிய...