Skip to main content

Posts

Showing posts from November, 2022

அகத்தீ - விதை பந்து செய்யலாம் வாங்க....

  விதை பந்து செய்யலாம் வாங்க.... 01/12/2022 எந்த உயிரினமும் இல்லாம மனிதனால் வாழ முடியாது ஆனால் மனிதன் மட்டும் இல்லை என்றால் அனைத்து உயிரினமும் மகிழ்ச்சியாக புவியில் வாழும்... என்ற வாழ்கையின் விதியை மாணவர்களுக்கு எடுத்து சொல்லி விளக்கிய பிறகு.... "மனிதர்கள் உலகத்தில் இல்லனா வெயில் காலத்துல மரத்துக்கு யார் தண்ணி ஊத்து வாங்க ?" "அண்ணா விதை வந்ததா இல்ல மரம் வந்ததா முதல்ல ?" பரிணாம வளர்ச்சியில் மரம் தான் மனிதர்களுக்கு முன்னோர்கள் என்று சொல்லி மனித இனத்தை ஒத்த வேறு சில உயிரினமும் இருந்துள்ளது என்று சில தகவல்களை பகிர, ஆச்சரியத்துடன் கேட்ட மாணவர்கள் ..... " அண்ணா இதை பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசையா இருக்கு, வேறு எங்காவது இதை போல நடத்தினா எங்களுக்கு சொல்விங்களா ?" என்று ஏக்கத்துடன் கேட்டார்கள். "அண்ணா என் பெயர் சகானா, 2019 ல அகத்தீ நடத்தின சிறார்களம் நிகழ்விற்கு வந்து இருக்கேன். நாட்டு மாட்டு பண்ணை, பச்சமலைக்கு எங்கள கூட்டிகிட்டு போனீங்க. பொம்மலாட்டம் கூட அன்னிக்கு நடந்தது.... " என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது. கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள கு...

அகத்தீ - வாழ்வியல் பயிற்சி

  வாழ்வியல் பயிற்சி - 29/11/22 சிகரெட் பிடிப்பது தப்பு என்றால் பற்பசையை (Toothpaste) வைத்து பல் துலக்குவதும் தப்பு. புகை பிடிக்கும் பொழுது ரத்த நாளங்களின் மூலமாக மூளைக்குச் சென்று போதையை ஏற்படுத்தி புற்று நோய்க்கு காரணமாக இருக்கின்ற நிக்கோட்டின் போன்ற பல வேதி பொருட்களை உள்ளடக்கியதே நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பற்பசைகளிலும் உள்ளது. தன் மகளுக்கு நஞ்சில்லாத பயன்பாட்டு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தோழர் திருகாப்பு அவர்களின் இயற்கையை நோக்கிய வாழ்க்கை பயணம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களில் தொடங்கியது. பாத்திரம், துணி, மற்றும் தரை துடைப்பதற்கான சுத்தப்படுத்தி, பற்பொடி, குளியல் பொடி என்று எல்லாவற்றையும் விளக்கமாக செய்து காட்டினார். எழில் கட்டி செய்வதில் குறிப்பிட்ட அளவுக்கு வேதி பொருட்களை தவிர்க்க முடியாத சூழலில், குளியல் பொடியே சிறந்த தீர்வாகும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியே எழில் கட்டி செய்து காட்டப்பட்டது. குழந்தைகளின் நடனத்துடன் இனிமையாக நிறைவடைந்தது நிகழ்வு. - அகத்தீ

பாசங்களும் நேசங்களும் ... வழி அனுப்பிய தோழமைகள் ...

  பாசங்களும் நேசங்களும்... வழி அனுப்பிய தோழமைகள்‌... நித்யா சிரினி தோழர் இருவரும் அவர்கள் மூன்று பிள்ளைகளுடன் பணி நிமித்தமாக கனடா நாட்டுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். தாம்பரம் மக்கள் குழுவிற்கு இவர்களின் பங்கு மிகவும் சிறப்பானது. இருவரும் அவர்கள் துறையில் தனிப்பெரும் ஆளுமைகள். கணினியின் மொழியை தமிழில் கற்பதற்கு நூல்கள் எழுதுவது, கரகாட்டம் ஜும்பா நடனம் என்று ஆட்டம் போடுவதில் பேராற்றலுடன் நித்யா ஒரு பக்கம் தூள் கிளப்ப... அச்சில் இல்லாத தமிழ் நூல்களை வரும் தலைமுறைக்கு மிகுந்த பொறுப்போடு மின்னூலாக கொண்டு சேர்ப்பதில் சிரினியும் அவர் நண்பர்களும் இணைந்து தொடங்கிய கணியம் அறக்கட்டளையின் செயல் பிரம்மிக்கத்தக்கது. இவர்களின் மிகப் பெரும் பணிக்கு அங்கீகாரமாக விகடன் விருதுகள், தமிழக அரசின் விருதுகள் பெற்று நம் எல்லோரையும் பெருமை அடைய செய்துள்ளனர். தன் பிள்ளைகளை தமிழ் வழி பள்ளியில் உறுதி காட்டி சேர்த்தது.... அதன் விளைவாக முதல் மகன் வியனின் அறிவு கூர்மையை வியக்கும் வண்ணம் பள்ளியே அவனை பாராட்டி தள்ளியது.... அனைவரிடமும் வாஞ்சையோடு ஒட்டிகொள்ளும் பாசக்காரி இரண்டாவது மகள் இயல்... சுட்டி தனதுக்கு குறைவ...

அகத்தீ - ஒடுக்கப்பட்டோரின் நாடகப் பயிலரங்கம்

அகத் தீ Workshop on Theatre of the oppressed History The Theatre of the Oppressed is a participatory form of theatre developed by Brazilian drama theorist, political activist and theatre practitioner Augusto Boal. Originally developed to give poor and disenfranchised communities a more powerful voice, it soon grew into an international theatre movement. Importantly, it is a form of rehearsed theatre for non-actors. What is Theatre of the Oppressed The Theatre of the Oppressed is a participatory theatre that fosters democratic and cooperative forms of interaction among participants. It is a ‘rehearsal theatre’ practiced by ‘spect-actors’ (not spectators) who have the opportunity to both act and observe, engendering processes of dialogue and critical thinking. It is an interactive mode of behaviour which stimulates evaluation and imaginative responses. In the Theatre of the Oppressed, the theatrical act is experienced as a conscious intervention, as a rehearsal for social action roote...