Skip to main content

Posts

Showing posts from August, 2017

அகத்தீ - சிறார் களம்

  அகத் தீ - சிறார் களம் நடத்தும் குழந்தைகள் உலகத்தை பற்றிய அனுபவ பகிர்வு. சனி 26 - 08- 17, காலை 9 மணி அகத்தி தோட்டம். குழந்தைகளிடம் கதை சொல்லல் மூலமாக தன் நீண்ட பயணத்தை தொடங்கி இப்பொழுது இந்தியா முழுவதும் பல கதைகளை தேடி தன் நீண்ட மிதிவண்டி பயணத்தின் பகுதியாக தாம்பரம் வந்துள்ள தோழர் குமார் ஷா ' குழந்தைகளும் நானும்' என்ற தலைப்பில் பேசி தொடங்கி வைப்பார். குழந்தைகளிடம் இயங்கி கொண்டு இருக்கும் செயல்பாட்டாளர்களும், ஆர்வம் உள்ள பெற்றோர்கள் அனைவரும் பங்கெடுக்கவும். ஏட்டு கல்வியை தினிக்கும் நாம் வாழ்கை கல்வியை நம் குழந்தைகளுக்கு அறிமுகபடுத்த வேண்டாமா ? வாருங்கள் அனுபவங்களை பகிர்வோம், கருத்துகளை விவாதிப்போம். தொடர்புக்கு : 9940220091, +91 90420 23090

அகத்தீ - நம்ம சந்தை

  அகத் தீ - நம்ம சந்தை மக்களே இன்று நம்ம சந்தை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.சந்தை பொருட்கள் அகத்தி உள்ளே மற்றும் வெளியே வைக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு இயற்கை வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்தான கலந்துரையாடலும் உள்ளது. கடந்த இரண்டு வாரமாக தோழர்களின் பெரும் உழைப்பினால் சந்தைக்கான வேலைகள் நடைபெற்று வந்தது.சந்தையை ஒட்டி பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.உணவு பொருட்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.மக்களின் மீது பெரும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ளோம்..அனைவரும் வாருங்கள். மாலை 5.30 மணி வரை சந்தை நடைபெறும்.