Skip to main content

Posts

Showing posts from September, 2021

அகத்தீ - பனையும் அகத்தியும்

  பனையும் அகத்தியும் "தோழர் நானும் என் குடும்பமும் பனை சார்ந்து வாழ்வியலை முன்னெடுத்து தொடர்வதற்கு 'அகத்தீ ' தான் முதன்மையான காரணம். 2017 கடுமையான வரட்சி, தினசரி வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாச்சு. தாம்பரம் அகத்திலேயும் 'நம்ம சந்தை' தொடர்ச்சியா போட்டுக்கிட்டு இருந்தீங்க. அப்போதான் பனை என் கண்ணுல பட்டுச்சு. பனை ஓலை நிறைய மரத்தடியில் கீழே விழுந்ததை பார்த்துட்டு அதிலிருந்து ஏதாவது கைவினைப் பொருட்கள் பொம்மை செய்யலாம், அதை அகத்தி சந்தையில விக்கலாம் அப்படின்னு தான் தொடங்கினேன். அப்போது அகத்தி தோழர்கள் கொடுத்த உற்சாகமும் ஊக்கமும் தான் பனை சார்ந்த வேலைகளை தீவிரமா எடுக்க காரணம். அதற்குப் பிறகுதான் பனைமரம் ஏரவே கத்துக்கிட்டேன்." என்று சொல்லும் தோழர் பாண்டியன் பனையேறி இன்று தமிழகத்தில் பனை சார்ந்த வாழ்வியலை மீட்டெடுப்பதில் தன்னை முழுவதுமாக அற்பணித்துள்ளார். பனை தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் முதன்மையான செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார். பனையோடு உறவாட களத்தில் பனங்காட்டு தோழர்களோடு கரம் கோர்ப்போம். தேவையும் சூழலுமே ஒரு மனிதனை மிகுந்த ஆற்றல் மிகுந்தவனாக மாற்றுகிறது,...