Skip to main content

Posts

Showing posts from October, 2021

அகத்தின் 'தீ' - நேற்று ஒரு ஒன்றுகூடல்

  அகத்தின் 'தீ ' நேற்று ஒரு ஒன்றுகூடல் தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியளவில் குழந்தைகள், கல்வி, உணவு, விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளிலும் செயல்படும் நண்பர்களுடனான ஒரு சந்திப்பு. காலநிலை மாற்றம் - சமூகப் பள்ளி - ஊர் திரும்புதல் - ஜாதிய பாகுப்பாடு- வானகம் பயணம் - கீழ்வெண்மணி - திடக்கழிவு மேலாண்மை - மாடித்தோட்டம் என்று ஆக்கப்பூர்வமான உரையாடலாக இருந்தது. பட்டாசுகளைத் தவிர்ப்போம் ! இயற்கையைப் பாதுகாப்போம் ! தீப 'ஒளி' திருநாளை கொண்டாடுவோம் ! என்ற உறுதிமொழியுடன் கலைந்தோம்.

அகத்தீ - சமூகப் பள்ளி - கொடைகானல் களரி பள்ளி

  சமூகப் பள்ளி "நான் பிறந்து வளர்ந்தது பெங்களூர், தமிழ் தெரியாமதான் திருமணம் முடிந்தவுடன் சென்னைக்கு வந்தேன். என் மகன் முகுந்து பிறந்தவுடன், அவனுக்கான ரசாயனம் இல்லா வாழ்கைக்கான தேடலில் எனக்கான பெரிய தொடக்கமாக ஏராளமான மனிதர்களை அறிமுகம் செய்தது தாம்பரம் 'அகத்தி'. அகத்தியிலிருந்து தொடங்கிய பயணம் ரொம்ப அழகானது. அது இப்பொழுதும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் எங்கு போனாலும் நண்பர்கள் இருக்கிறார்கள்." என்று கொடைகானலில் கடந்த சனி ஞாயிறு களரி பள்ளியில் 'சமூக பள்ளி' பற்றிய உரையாடலில் பகிர்ந்து கொண்ட பிரியா, அகத்தி நம்ம சந்தையில் ரசாயணம் இல்லா சுத்தபடுத்தியை அறிமுகம் செய்து பரவலாக்கியதில் முதன்மையானவர்.