Skip to main content

Posts

Showing posts from July, 2022
  சூழலியல் பயணம் நேற்று இயற்கை விவசாய பண்ணை வலம் உரையாடல் - உணவு காடு அதன் முக்கியதுவமும் - சுவரில்லா கல்வி - சிறார் களம் - காலநிலை மாற்றம் - வாழ்வியல் பயிற்சிகள் - தாம்பரம் மக்கள் குழு • திருக்கழுக்குன்றம் - இறையழகன் ஐயாவின் தமிழ் நிலம் • கீழ்கல்வாயி - கார்திக் தாரணியின் ஒருங்கிணைந்த பண்ணை • தோழர் நந்தாவின் நிலம் - ஊர் திரும்புதலின் அனுபவம். பயணங்களே வாழ்கையின் சிறந்த முதலீடு.
அகத் தீ - நினைவேந்தல்   வெற்றிடத்தை காற்று வந்து நிரப்புவது போல அல்ல மனித உறவுகளின் இழப்பின் வெற்றிடம்.... தோழன் காசியின் திடீர் இறப்புக்கு பிறகு இரண்டு மாதம் கழித்து நினைவு கூட்டத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது "நான் செத்துட்டா இதே மாதிரி செய்வீங்களா தோழர்" என்று கணேஷ் தோழர் ஒரு ஏக்கத்துடன் கேட்க புன் சிரிப்பை மட்டும் அப்போது அவருக்கு பதிலாக கொடுத்தேன். நினைவு கூட்டத்தில் இதை பகிர்ந்து கொண்ட பொழுது "எனக்கும் மண்டகுள்ள இதுதான் ஓடிக்கொண்டே இருந்தது. நான் செத்துட்டா யாராவது இந்த மாதிரி எனக்கு செய்வாங்களா அப்படின்னு..." என்று தீபா முணுமுணுக்க நினைவு கூட்டத்தின் முடிவில் பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணம் ஓடிக்கொண்டு இருந்ததை உணர முடிந்தது. காசி அக்கா "அவன் இவ்ளோ நண்பர்களை சம்பாதித்து வச்சிருக்கான் அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. அவன் இருக்கும்போது உங்க எல்லோருடன் தான் இருந்தான்னு தெரியாம போயிடுச்சு. அவன எவ்வளவோ வாட்டி வேலைக்கு போக சொல்வேன். உன்ன நீ பார்த்துக்கவாது ஒரு நல்ல சம்பளத்துக்கு போக வேலை வாங்கி தரேன்னும் பல தடவ சொல்லி இரு...
  அகத்தீ பொம்மலாட்டம் "அந்த காலத்துல மக்கள் எல்லாருக்கும் மாயசக்தி இருந்தது....அந்த ரகசியம் அங்கு இருக்க பழைய கிணற்றுள்ள இருக்கு"னு பாட்டி சொல்ல "மாய சக்தியா.....?" என்று கோமாளி ஆச்சரியப்பட "அது என்னனா..... ? அவங்க எல்லாரும் ஒற்றுமையா இருந்து, காடு, மலை, ஆறு, என்று எல்லாவற்றையும் பத்திரமா பாதுகாத்து மகிழ்ச்சியா இருக்கும்பொழுது இருந்த மாய சக்தி அது....." என்று கிணற்றுக்குள் இருந்து வந்த முதலை சொல்ல ஆரம்பித்தது. இப்படியாக "கோமாளி" நாடகம் பயணிக்க, சிறார்களின் வெடி சிரிப்பு, கேள்விகள், கிண்டல்களுக்கு நடுவே குட்டி மழையுடன் நிறைவடைந்தது. மரம், கிளை, பழம் விளையாட்டில் தொடங்கி, ஏழு குழுவாக குழந்தைகள் பிரிந்து அவர்களுக்குள் கதைகள் பேசி, காதாபத்திரங்களை வரைந்து,வெட்டி, ஒட்டி, விரல் பொம்மைகளாக மாற்றி, நடித்து, கதைத்து, விளையாடி, மகிழ்ந்தார்கள். எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், நாற்பதற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கு சிறுதானிய உருண்டையும், பெற்றோர்களிடம் விஞ்ஞானிகள் செர் சி.வி.ராமன் மற்றும் டார்வின் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்தோ...
  வாழ்வியல் கல்வியை நோக்கிய ஒரு பயணம்..... "தோழர் இந்த வருடம் இரண்டு பேரையும் பள்ளி கூடத்துல இருந்து நிறுத்திடேன். அவங்களோட நிறைய பயணிக்கப்போறேன். இந்த ஆண்டு ஏட்டு கல்விக்கு விடுமுறை விட்டுட்டு வாழ்கை பாடத்தையும், வாழ்வியல் கல்வியும் பசங்க கத்துக்கனும்னு நினைக்கறேன். குழந்தை பருவத்தையும் அனுபவிக்கனும், விருப்ப பட்டதையும் செய்யனும். நான் சிலவற்றை திட்டமிட்டு இருக்கேன், உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்" என்றார் வருண் (7வது வகுப்பு), வர்ஷாவின் (5வது வகுப்பு) அம்மா. "வாழ்த்துக்கள் தோழர், தில்லான முடிவு. இந்த ஆண்டை சிறப்பா திட்டமிடுவோம். எங்க வீட்டு பக்கத்துல எனக்கு தெரிஞ்ச ஒரு அங்கிள் வண்டிய (இருசக்கர வாகனம்) நல்லா பழுதுபார்பாரு. அவருக்கு அது பற்றியான ஏராளமான நூட்பமான விடயங்கள் தெரியும்...." என்றேன் "இந்த மாதிரிதான் நானும் அவங்களுக்கு எதிர்பார்கிறேன்.... எப்போ அவர பார்க்க போகலாம் தோழர்....." அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் பேசியதிலும், வீட்டிலேயே இருக்கும் வண்டி பழுதுபார்க்கும் இடத்தை பார்த்ததில் வருணுக்கும் பிடிச்சு போச்சு. பயணம் தொடரும்.......
  தாம்பரம் மாநகராட்சியின் சுகாதார துறை ஆய்வாளர் (Sanitary inspector) வீட்டிற்கு திடீர் வருகை எங்கள் தெருவை சுத்தம் செய்யும் பொழுது துப்புறவு மேற்பார்வையாளர் எங்கள் வீட்டில் மக்கும் உரம் செய்வதை பார்த்து சொன்னதை ஒட்டி கடந்த புதன் காலை கிழக்கு தாம்பரம் பகுதிக்கான சுகாதார துறை ஆய்வாளர் திரு சாமுவேல் அவர்கள் தீடீரென்று வீட்டிற்கு வந்தார். வீட்டில் நிறுவப்பட்டுள்ள 'பசுமை தொட்டி 3.0', 'பசுமை தொட்டி 1.0" வையும் ஆச்சர்யத்துடன் பார்த்து அதை பற்றி விளக்கமாக கேட்டு விசாரித்தார். எப்போது இருந்து இத செய்யரிங்க ? எவ்வளவு நாளாக மக்க வைக்கரிங்க? என்னலாம் கழிவுகள போடரிங்க ? வேர ஏதாவது இதுல ஊத்தரிங்களா ? மண்புழு உரத்த பசுமை தொட்டியின் துணையுடன் கடந்த 2019 ல் இருந்து உற்பத்தி செய்வதாகவும், இலை தழை, வீட்டு காய்கறி கழிவுகள் மட்டுமே போடுவதாகவும், தொடக்கத்தில் நன்ணுண்மிகள் (Good effective micro organism) தெளித்ததாகவும், ஒன்றரை ஆண்டு கழித்து இப்போது தான் சில நாட்களுக்கு முன்பு 25 மூட்டை மண்புழு உரம் எடுத்தாகவும், இன்னுமொறு 25 மூட்டை எடுக்கும் அளவுக்கு உள்ளதாகவும், எப்படி சலித்து எடுத்தேன் ...