வாழ்வியல் கல்வியை நோக்கிய ஒரு பயணம்.....
"தோழர் இந்த வருடம் இரண்டு பேரையும் பள்ளி கூடத்துல இருந்து நிறுத்திடேன். அவங்களோட நிறைய பயணிக்கப்போறேன். இந்த ஆண்டு ஏட்டு கல்விக்கு விடுமுறை விட்டுட்டு வாழ்கை பாடத்தையும், வாழ்வியல் கல்வியும் பசங்க கத்துக்கனும்னு நினைக்கறேன். குழந்தை பருவத்தையும் அனுபவிக்கனும், விருப்ப பட்டதையும் செய்யனும். நான் சிலவற்றை திட்டமிட்டு இருக்கேன், உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்" என்றார் வருண் (7வது வகுப்பு), வர்ஷாவின் (5வது வகுப்பு) அம்மா.
"வாழ்த்துக்கள் தோழர், தில்லான முடிவு. இந்த ஆண்டை சிறப்பா திட்டமிடுவோம். எங்க வீட்டு பக்கத்துல எனக்கு தெரிஞ்ச ஒரு அங்கிள் வண்டிய (இருசக்கர வாகனம்) நல்லா பழுதுபார்பாரு. அவருக்கு அது பற்றியான ஏராளமான நூட்பமான விடயங்கள் தெரியும்...." என்றேன்
"இந்த மாதிரிதான் நானும் அவங்களுக்கு எதிர்பார்கிறேன்.... எப்போ அவர பார்க்க போகலாம் தோழர்....."
அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் பேசியதிலும், வீட்டிலேயே இருக்கும் வண்டி பழுதுபார்க்கும் இடத்தை பார்த்ததில் வருணுக்கும் பிடிச்சு போச்சு.
Comments
Post a Comment