Skip to main content

Posts

Showing posts from February, 2026

மாணவர்களுடனான நம் சூழலியல் கற்றல் பயணமும் நினைவு பரிசும்

  தமிழும் இயற்கையும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியும் ..... மொத்தம் 17 பள்ளிக்கூடங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று பிரிவுகளாக 11 போட்டிகளில் பங்கெடுத்தனர். 65 மாணவர்கள் பரிசு பெற்றார்கள். மாணவர்களுக்கான இந்த திறனறிதல் போட்டியை திட்டமிடும் போதே இது தொடர் நிகழ்வுகளுக்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இதன் காரணமாக மட்டுமே பரிசுகளை அதற்க்கு ஏற்றார் போல் திட்டமிட்டோம். ஒரு தலைமை ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் " நீங்கள் அறிவித்திருக்கும் பரிசு சிறப்பாக ஒன்றுமில்லை ஆனால் ஏதோ வித்தியாசமா இருக்கு" என்றார். ஆம் எங்களுக்கு பதக்கங்களும் கேடயங்களும் வழங்குவதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. அதற்கு மாற்றாக திட்டமிடும் போது உதித்த சிந்தனைகளே இவை • அகத்தீக்கு நன்கு அறிமுகமான தாம்பரத்தை சுற்றி உள்ள இயற்கை விளைபொருள் அங்காடிகள் மூலமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அட்டைகளை வழங்கினோம். இதன் மூலம் நேரடியாக கடையில் சென்று மாணவர்கள் பரிசு பொருட்களை பெறும் போது ஏற்படும் உரையாடல்களையும் மிக முக்கியமாக கருதினோம். பரிசு அட்டைகளையும் ச...

வேளாண் சுற்று பயணம் புதியதோர் கற்றல் உலா

  உணவு காடு அறிதல் - கற்றல் பயணம் தமிழும் இயற்கையும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஒரு நாள் சுழலியல் பயணமாக திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள மாதிரி வேளாண் சுற்றுலா இடமான தமிழ் நிலம் தமிழ் பண்ணை உணவுக்காட்டுக்கு கடந்த பிப்ரவரி 15 அன்று அழைத்து சென்று வந்தோம். மொத்தம் 6 பள்ளியில் இருந்து வெற்றி பெற்ற இருபது மாணவர்களுடன், 25 பேர் கொண்ட குழு சென்று வந்தோம். பரிசின் ஒரு பகுதியாக வெற்றி பெற்ற மாணவர்களை இது போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியதன் அடிப்படையில், "தங்கள் இடத்திற்கு வரலாமா ?" என்று கேட்டவுடன், தோழர் இறையழகன் அவர்கள் உடனடியாக நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தார். தமிழ் நிலம் தமிழ் பண்ணைக்குச் சென்றவுடன் குழந்தைகளை கவறும் விதமாக அங்கிருந்து விளையாட்டு பொருட்களை எடுத்து அவர்கள் கூடி விளையாடினார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து டிராக்டர் மூலமாக பண்ணையை சுற்றி காண்பித்தார்கள். பிறகு தோழர் இறையழகன் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ் பண்ணையில் அமைந்துள்ள மரங்கள் மற்றும் இந்த நிலத்தின் வரலாறு என்று பலவற...