உணவு காடு அறிதல் - கற்றல் பயணம்
தமிழும் இயற்கையும் போட்டியில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஒரு நாள் சுழலியல் பயணமாக திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள மாதிரி வேளாண் சுற்றுலா இடமான தமிழ் நிலம் தமிழ் பண்ணை உணவுக்காட்டுக்கு கடந்த பிப்ரவரி 15 அன்று அழைத்து சென்று வந்தோம்.
மொத்தம் 6 பள்ளியில் இருந்து வெற்றி பெற்ற இருபது மாணவர்களுடன், 25 பேர் கொண்ட குழு சென்று வந்தோம்.
பரிசின் ஒரு பகுதியாக வெற்றி பெற்ற மாணவர்களை இது போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியதன் அடிப்படையில், "தங்கள் இடத்திற்கு வரலாமா ?" என்று கேட்டவுடன், தோழர் இறையழகன் அவர்கள் உடனடியாக நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தார்.
தமிழ் நிலம் தமிழ் பண்ணைக்குச் சென்றவுடன் குழந்தைகளை கவறும் விதமாக அங்கிருந்து விளையாட்டு பொருட்களை எடுத்து அவர்கள் கூடி விளையாடினார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து டிராக்டர் மூலமாக பண்ணையை சுற்றி காண்பித்தார்கள். பிறகு தோழர் இறையழகன் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ் பண்ணையில் அமைந்துள்ள மரங்கள் மற்றும் இந்த நிலத்தின் வரலாறு என்று பலவற்றை சுவாரசியமாக வந்திருந்த மாணவர்களுக்கு விளக்கினார்.
அது முடித்தவுடன் சேத்து குளியல். அதனுடன் கயிறு இழுத்தல், கபடி என்று மகிழ்ச்சியாக குழந்தைகள் விளையாடி தீர்த்தார்கள். அதற்குப் பிறகு மழை குளியல் மற்றும் தொட்டி குளியல் என்று ஆசை தீர நீரில் விளையாடினார்கள். மதியம் எளிமையான உணவு அதன் பிறகு சிறிய அனுபவ பகிர்வுடன் அன்றைய நாள் சிறப்பாக முடிந்தது.
வந்திருந்த ஒரு மாணவியின் பெற்றோர் அருமையாக பாடியது சிறப்பாக அமைந்தது. புனித ஜோசப் பள்ளியின் ஆசிரியர் எங்கள் மாணவர்கள் அனைவரையும் அழைத்து வர வேண்டும் என்று விருப்பத்தை முன் வைத்தார்.
ஒரு கற்றல் பயணமாக அதே நேரத்தில் மாணவர்கள் விரும்பும்படியான குதுகளிக்கும் பயணமாகவும் அமைந்தது மகிழ்ச்சியே. ஆர்வம் உள்ள பள்ளிக்கூடங்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை அனுபவமாகவும், பசுமையான நினைவுகளையும் ஏற்படுத்த இது போன்ற பயணங்களை வரும் நாட்களில் திட்டமிட்டுள்ளோம்.
Comments
Post a Comment