தீபாவளி நாளன்று வீடு முழுவதும் விளக்கேற்றுவோம்... பாரம்பரிய இனிப்புகள் செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம் சூழலுக்கேற்ற புத்தாடைகள் உடுத்துவோம்.. சக உயிர்களுக்காகவும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகவும் பட்டாசுகளை தவிர்ப்போம். நம் மகிழ்ச்சிக்காக வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசுக்கு பின்பு நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களால் புண்ணாகிப்போன பிஞ்சு விரல்கள் ஏராளம்! குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வெடிக்கு விடை கொடுப்போம்! நாம் ஏற்படுத்தும் வெடிச் சத்தத்தினால் முதியவர்கள், பிஞ்சு குழந்தைகள், பறவைகள், நாய், பூனை, மாடு, போன்ற விலங்குகளும் மிகப்பெரிய துன்பத்திற்கு உள்ளாகின்றன பல தமிழக கிராமங்களில் பறவைகள் வரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதால் பட்டாசை அறவே தவிர்த்து வருகின்றனர். (எ.கா) நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராம மக்கள் பட்டாசுகளை எப்பொழுதும் வெடிப்பதில்லை காரணம் அங்கு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பட்டாசு வெடிப்பதினால் நாம் நம் காற்றையும் மண்ணையும் நிலத்தடி நீரையும் மிகப்பெரிய அளவுக்கு நஞ்சாக்குகிறோம்.இதனால் பல நோய்களுக்கு உள்ளாகிறோம் குறிப்பாக புற்றுநோய் மற்றும் ஏராளமான சுவ...