Skip to main content

Posts

Showing posts from August, 2019

திடக்கழிவு மேலாண்மை, சவால்களும், தீர்வுகளும் !

  கருத்துரையும் செயல்முறை விளக்கமும் திடக்கழிவு மேலாண்மை  சவால்களும் தீர்வுகளும் ! • மக்கும் குப்பைகளை எளிமையாக  வீட்டிலேயே துர்நாற்றம் இல்லாமல்  உரமாக மாற்றலாம் • அதற்கான நன்நுமிகளை நாமே வீட்டில் தயாரிக்கலாம் 25 ஆகசுட் 2019 ஞாயிறு மாலை 3.30 மணி அகத்தி தோட்டம் சென்னை போன்ற நகரங்களில் குப்பைகளை சேகரித்து பிரித்து அப்புறப்படுத்துவது என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளிலேயே குப்பைகள் கொட்டப்படுவதும் எரிப்பதும் இன்று வழக்கமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வில்லை என்றால் துர்நாற்றம் அடிக்கும் பகுதியாக மாறுகிறது. குப்பை தொட்டி இல்லாமல் வீட்டிலேயே சேகரிக்கும் ஏற்பாடு என்றால் வீடு நாறிவிடுகிறது. நுகர்வு வாழ்க்கை முறையினால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து மக்காத குப்பைகளை வீட்டினுள் கொண்டு வருவதையே நாம் உறுதியாக தவிர்க்க வேண்டும். மற்ற குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்கள் உங்களையும் என்னையும் போன்ற சக மனிதர்கள்தான். நாம் தொட அருவருக்கும் கழிவுகளை தங்கள் இரு கரங்களால் பிரித்து மிகப...