அகத்தீ சிறுவர்களுக்கான நூல் அறிமுகம் நிகழ்வு நேற்று சிட்லபாக்கம் ஏரிக்கரையில் மழை காரணமாக ரத்து செய்த போது "மாமா நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க ? மழை இங்க பெருசா இல்ல" என்று நிஷாந்த் சொல்ல... இன்னும் சிலர் நிகழ்வுக்காக வந்திருந்தது தெரிய வந்தது.... என்ன ஆச்சரியம், மகிழ்ச்சி. தமிழ் ஆசிரியர் தோழர் வெஸ்லி அவர்கள் எழுதிய சிறுவர் கவிதையை நிஷாந்த் எங்கள் முன்பு வாசித்தான். "குயில் தான் ஒரு குயில் என்று அறியும் போது குக்கூ என்றது" இயற்கையிடமிருந்து பாடம் கற்கும் செய்தியாக இருந்தது இந்த கவிதை. சிட்லபாக்கம் ஏரியில் மரம் நடுவதை சிறப்பான பணியாக செய்து கொண்டிருக்கும் நிழல் அமைப்புக்கு தோழர் வெஸ்லி எழுதிய தாம்பரம் வரலாறு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. - அகத்தீ