Skip to main content

Posts

Showing posts from September, 2023

அகத்தீ - திணை வாழ்வியல்

  அகத் தீ திணை வாழ்வியல்: ஏரிக்கரைக் கலந்துரையாடல் இடம்: சிட்லப்பாக்கம் ஏரிக்கரை நேரம், நாள்: காலை 7 மணி, ஞாயிறு, 17 செப்டம்பர், 2023 கலந்துரையாடல் பொருள் பற்றிப் பேசியவர்: பேராசிரியர் நிர்மல் செல்வமணி உரையைத் தொகுத்து வரைந்தவர்: தோழர் காஞ்சனா ஞாயிற்றுக்கிழமை 17/ 9/23 அன்று ஐயா நிர்மல் செல்வமணி அவர்களுடன் சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடந்த உரையாடலின் தொகுப்பு. நமது காலத்தில் நாம் விரும்பித் தேடுகின்றவைகளைப் பற்றி நமக்கு எடுத்துச் சொல்ல நம்மிடையே உள்ள மிகப்பெரிய ஓர் ஆளுமை நிர்மல் ஐயா அவர்கள். அவர்களை அழைத்து வந்ததற்கு பாரதி தோழருக்கு நன்றி. திணை வாழ்வியலே அன்றைய கலந்துரையாடலுக்கு ஐயா எடுத்துக்கொண்ட பொருள். திணை என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிச் சொன்னார். “இணை” என்பதே திணையின் அடிப்படை என்றும் “இணை” என்றால் இசையில் ச-ப சுர உறவு என்றும் கணவன்-மனைவி உறவு என்றும் விளக்கினார். (பாரதி- வைஷ்ணவி தோழர் இணை ஏற்பு விழா எனத் தம் திருமண ஆண்டு விழாவைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளனர் என நிர்மல் ஐயா பாரதியைப் பாராட்டினார்). நிலமும் பொழுதும் மனிதனும் அனைத்து உயிரிகளும், தெய...

அகத்தீ - நாட்டு மாட்டு பண்ணை மற்றம் புதுதாங்கள் ஏரிக்கரைக்கு ஒரு பயணம்

  அகத் தீ நாட்டு மாட்டு பண்ணை மற்றும் புதுதாங்கள் ஏரிக்ககரைக்கு ஒரு பயணம் 50க்கும் மேற்பட்ட குஜராத் ரகங்களான காங்கிரிட்ஜ் மற்றும் கிர் மாடுகளை கடந்த ஏழு ஆண்டுகளாக தாம்பரம் போன்ற நகரத்தில் வெற்றிகரமாக வளர்த்து வரும் தமிழன் மாட்டுப்பண்ணைக்கு சென்று பார்தது. தாம்பரம் மக்கள் குழுவின் முன்னெடுப்பில் புதுப்பித்து தூர்வாரப்பட்டு மரங்கள் நட்டு பனை விதைகள் விதைத்து பராமரிக்கப்பட்ட புதுத்தாங்கல் ஏரிக்கு சென்று பார்தது. காலை 7 மணி முதல் 9 மணி வரை 02 / 09 / 23 | மேற்கு தாம்பரம் நாம் வாழும் பகுதியில் நாம் சென்று தெரிந்து கொள்ள வேண்டிய இடங்களை நேரில் பார்த்து புரிந்து கொள்வதற்கான முயற்சி இந்த முன்னெடுப்புகள். கடந்த சனிக்கிழமை மேற்கு தாம்பரத்தில் உள்ள இந்த இரண்டு இடங்களுக்கு சென்று பார்த்து வந்தோம். மாடு வளர்ப்பதற்கான பெரிய அனுபவ அறிவும் பின்னணியும் இல்லாமல் தைரியமாக தான் செய்திருந்த வேலையை விட்டுவிட்டு இன்று முழு நேரமாக தமிழன் நாட்டு மாட்டு பண்ணை மூலமாக பால் விற்பனை செய்து கொண்டுள்ளார் தோழர் ராஜேஷ். தான் செய்வதை தற்போது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சொல்ல முடியுமா என்றபோது "இல்லை நானே இப்போது ம...