நன்கொடைக்கு கீழே உள்ள இணைப்பில் விவரங்கள் தருக.
Please fill the below form for donations.
நன்கொடைகளுக்கு 80G ன் படி வரிவிலக்கு உண்டு.
Donations are tax exempt under 80G.
ஏன் அகத்தீ செயல்பாட்டுக்கு உங்கள் பங்களிப்பு முக்கியமானது ?
கடந்த 2016 முதல் தாம்பரத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் அகத்தீ அமைப்பு, வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள் விட்டு சென்ற பெருங் கனவின் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
பெருநகர வாழ்க்கையில் சிக்கி தவிப்பவர்கள் இடையில் செயலின் ஊடாக, ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து எதிர்காலத்தின் மீதான ஒரு நம்பிக்கையை விதைப்பதே அகத்தீயின் அடிப்படை நோக்கமாகும்
உலக அளவில் சிந்திக்க வேண்டும் உள்ளூர் அளவில் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் சமகாலத்தில் நாம் எதிர்கொள்களும் காலநிலை மாற்றம், இருத்தலியல் நெருக்கடி ( Existential crisis) ஆகியவற்றை உள்வாங்கியதன் அடிப்படையில் அதை எதிர்கொள்ள பல வழிகளில் அகத்தீ களத்தில் பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றின் மூலமாகவும், வரும் தலைமுறையினருக்கு குறிப்பாக குழந்தைகள் மத்தியில் உணவு, கல்வி, மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் பயிற்சிகளை சூழலியல் பயணங்கள் மூலமாகவும் அளித்து வருகிறோம். இதன் மூலம் ஒரு தற்சார்பான சமூகத்தை உருவாக்குவதற்கான சீரிய முறையில் வேலைகளை முன்னெடுக்கிறோம்.
உண்மையான மாற்றம் என்பது நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்டுள்ள அழிவை ஏற்படுத்தும் வாழ்க்கை முறையை தவிர்த்து (Unlearning), நிலையான நடைமுறைகளைத் தழுவுவதிலிருந்து தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
அறம் சார்ந்த வழியில் நம் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ள ஒருவருக்கொருவர் துணை புரிய ஒரு தளமாக அகத்தீ தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நமது கூட்டு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏராளமான புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் பின்னணியில், சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான எங்கள் பயணத்தில் உங்கள் பங்களிப்பு இன்றியமையாதது.
எங்களுடன் கைகோர்க்க
எங்களை தொடர்பு கொண்டு அகத்தீயின் செயல்பாடுகள் குறித்து உரையாடி தெரிந்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் அகத்தீயின் பதிவுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவியுங்கள், முடிகின்ற பொழுது அகத்தீயின் நிகழ்வுகளில் பங்கெடுங்கள், தன்னார்வலர்களாக செயல்படுங்கள். இவை அனைத்தும் நம் கூட்டு கனவை உயிர்ப்புடன் வைப்பதற்கான ஆற்றலாக அமையும்.
இதன் ஒரு பகுதியாக தொடர் செயல்பாட்டுக்கு பொருளாதார உதவியும் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. உங்கள் தாராளமான நன்கொடையை நாங்கள் வரவேற்கிறோம்.
எனவே உங்கள் சிறிய பங்களிப்பு கூட, நுகர்வு வாழ்க்கை முறையில் இருந்து இயற்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைக்கு விதைக்கப்படும் உரமாக அமையும்.
இந்த ஆண்டு (2025-26) முன்னெடுத்துள்ள வேலைகளில் உங்களுடைய நிதி பங்களிப்பு இன்றி அமையாததாக கருதுகிறோம்
1.தமிழும் இயற்கையும் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் பன்முகத்திறனை வெளிக் கொண்டுவரும் சூழலியல் போட்டிகள்
2. சிறுவர்கள் இடையே சூழலியல் சார்ந்து செயல்படக்கூடிய இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்கள் செயல்பாட்டை மெருகேற்றுவதற்கான ஊக்கத்தொகை வழங்குவது.
Comments
Post a Comment