அகத் தீ வண்ணங்களை தீட்டுவோம் நேற்று "காகிதத்துல, சுவர்ல வரைஞ்சிரிப்பிங்க, எவ்வளவு பெயர் இளநீர் குடுவைல வரைஞ்சிரிக்கீங்க, கை தூக்குங்க ?" என்று கேட்டேன். ஒரு சில சிறுவர்களை தவிர்த்து மற்றவர்கள் எல்லோருக்கும் இது தான் முதல் முறை. "இங்கு குப்பை என்பது எதுவும் இல்லை, எல்லாம் வளம் தான். ஒரு பொருள் தேவை தேவையில்லை என்பது நம் பார்வையில் உள்ளது. அதை கலைநயத்துடன் மாற்றுவது நம் கையில் உள்ளது. இயற்கைக்கு நெருக்கமாக நாம் செல்வதற்கான ஒரு வெளியை தாம்பரம் அகத்தீ சிறார்களம், தொடர்ச்சியாக ஏற்படுத்தி கொண்டுயிருப்பதற்கான ஒரு முன்னெடுப்பு தான் இந்த நிகழ்வு. இயற்கையை பாதுகாக்க வேண்டும் நீர் நிலைகளை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு நாம் கூடியதை ஒட்டி இளநீர் குடுவையில் வைத்து வளர்த்த அசோக மர கன்றை சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடுவோம் வாங்க" https://www.facebook.com/100067000364465/posts/656468443263162/?mibextid=cr9u03 https://youtu.be/hSQs0E8a61o?si=qHi7wFEARQ0_rUNM