Skip to main content

Posts

Showing posts from August, 2023

இயற்கை விவசாயம் வளம் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?

இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்க்கும் ஒரு முறையாகும். இயற்கை விவசாயம் என்பது பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் பிற பூமியின் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தும் பிற நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிறது. இயற்கை விவசாயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நமது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் இது மண் வளத்தை மேம்படுத்துகிறது, நீர் மாசுபாட்டைக் குறைக்கிறது மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. இயற்கை விவசாயம் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயக்கும், ஏனெனில் இது ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்கிறது மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுகாதார ஆபத்துகளைக் குறைக்கிறது. இயற்கை விவசாயம் வளர, நாம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: விவசாயிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்: இயற்கை விவசாயம் என்பது செயற்கை விவசாயத்தை விட சிக்கலானது மற்றும் அதிக திறன் தேவைப்படுகிறது. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்கான கல்வி மற்றும் ஆதரவு வழங்கப்பட வ...

வாருங்கள் முழுமை அடையலாம்

  வாருங்கள்   முழுமை அடையலாம்.   அகத்தீ அமைப்பு   தனி மனித வாழ்விற்கும் (இல்லறம்/அகவாழ்வு) பொது வாழ்விற்கும் (அரசியல்/புறவாழ்வு) ஒரு சேர முக்கியத்துவம் அளித்து வருகிறது. இக்கட்டுரையில்   இல்லற   வாழ்வியலுக்கான   ஒரு   முழு   முகாந்திரத்தை காண உள்ளோம்.   கடந்த   சில   மாதங்களாக   நன்நுண்மி (GEMs) பயன்பாட்டு பயிற்சி , நஞ்சில்லா உணவு குறித்த விழிப்புணர்வு , வாழ்வியல் சிந்தனைகள் என சில பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளன. அதன் பயனும், நோக்கமும்   நன்றாக உள்ளது. அதனடிப்படையில்   ஒரு   மனிதனின்   வாழ்விற்குத் தேவையான அத்துனை   பகுதிகளையும் முழுமையான   பயிற்சிகளாக வடிவமைத்து நம்மிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு:- Ø   நஞ்சில்லா உணவு Ø   மருத்துவம் Ø   தினசரி   பயன்படுத்தப்படும்   பொருட்களை   தயாரிக்கும்   அறிவு Ø   யோகா Ø   சட்ட அறிவு   என நம் வாழ்வியலுக்குத் தேவையான   அனைத்தையும் சீரான கால   இடைவெளியில் ...

அகத்தீ - திட்டமிடாத ஒரு பயணம் பேரையூர் மொட்டை மலை மற்றும் மரபு கட்டுமானம்

அகத் தீ   திட்டமிடாத ஒரு பயணம் பேரையூர் மொட்டை மலை | மரபு கட்டுமானம் கடந்த சனிக்கிழமை "தோழர் மதுரையில எங்க கல்யாணம் அப்படின்னு சொன்னீங்க ?" "திருமங்கலம் பக்கத்துல பேரையூர்ல" என்று காஞ்சனா தோழர் சொல்ல "என்னது பேரையூரா நானும் அங்க தான் இருக்கேன்... வந்துட்டு சொல்லுங்க தோழர்" என்றேன் சூழலியல் மாற்று கல்வி சார்ந்த பயணத்தில் அறிமுகமான உசிலம்பட்டி பிரதிபா அவர்களுடைய மகன் திருமணத்திற்கு வந்திருந்த அகத்தி தோழர்களை பேரையூரில் உள்ள மொட்டைமலைக்கும், வைஷ்ணவியின் சொந்த கிராமத்தில் தம்பி பரத்தின் மேற்பார்வையில் கட்டிக் கொண்டிருக்கும் மரபு வீட்டுக்கும் அழைத்து சென்று காண்பித்தது எதிர்பாராத ஒரு நிகழ்வாக அமைந்தது. "நுகர்வு வாழ்க்கை முறையின் குறியீடாக இப்போது நடக்கிற திருமணங்கள் மாறி உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வருவதே சலிப்பாக இருக்கு. போன மாசம் கூட இதே ஊருக்கு இதே மண்டபத்துல இதே விடுதி அறையில தங்கிட்டு போனோம். அப்போ கூட நடக்கிற தூரத்தில் இவ்வளவு அற்புதமான ஒரு மலை இருக்கு பார்க்க முடியும்னு தெரியல. ரொம்ப மகிழ்ச்சி பாரதி இங்கே கூட்டிகிட்டு வந்து காட்டுனத...

அகத்தீ - ஐந்தாவது பூதம் என்ன ?

  அகத் தீ ஐந்தாவது பூதம் என்ன ? தொடர்ச்சியாக இராண்டாவது ஆண்டு நேஷ்னல் பப்பிளிக் பள்ளி கோபாலபுரம் மாணவர்களை நேற்று தாம்பரம் பச்சை மலை மற்றும் சிட்லபாக்கம் ஏரி கரைக்கு அழைத்துச் சென்றோம். அவர்களுடன் நடந்த உரையாடலின் முடிவில் "2015 முதல் 2021 வரை, சென்னை ஐந்து பூதங்களில் நான்கு பூதத்தை பார்த்துவிட்டது ( மழை வெள்ளம், புயல், வரட்சி, கொரோனா ) ஐந்தாவது கூடிய விரைவில் வர போகிறது, தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மலையில் இருந்து கீழே இரங்கியவுடன் நினைவு இருந்தால கேளுங்க சொல்கிறேன்" என்றேன். மலையிலிருந்து இரங்கும் போதே மூன்று மாணவிகள் மட்டும் "ஐந்தாவது பூதம்" என்ன வரபோகிறது என்று ஆர்வத்துடனும் பயத்துடனும் கேட்டார்கள் ? அவர்களிடம் "ஐந்தாவது பூதம்" என்ன என்று சொன்னவுடன் பயத்தை வெளிபடுத்தினார்கள். "இதிலிருந்து மீண்டு வர முடியும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றேன். "எப்படி ?" என்றார்கள். "இதைப்பற்றி தெரிந்து கொண்டவர்கள் தீவிரமாக செயல்பட தொடங்குவார்கள் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையே காரணம். இப்போது உங்களிடம் கூறியுள்ளேன் நம்பிக்கை கூடி உள்ள...

உள்ளூர் வரலாறு - தாம்பரம்

  உள்ளூர் வரலாறு - தாம்பரம் ஒரு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை தாம்பரத்தை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று வந்தோம். நாம் வாழும் பகுதினுடைய வரலாற்றை தெரிந்து கொள்வதும் அதை ஆவண படுத்துவதும் மிகவும் முக்கியம். இந்த பயணத்தில் பங்கு எடுத்த பள்ளியில் இருந்து விடுபட்ட (Home schooler) 12 வயது நிரம்பிய மாணவன் நிஷாந்த் "சோழர் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தஞ்சாவூர் பக்கம் தான் போகணும் அப்படின்னு நினைத்தேன், ஆனால் சோழர் வரலாற்றை பற்றி நம்ம தாம்பரம் பகுதியிலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் புதிய தகவலாகவும் இருக்கு" என்றான் • மணிமங்கலம் போர்க்களத்தை பார்த்தது சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவ மன்னனுக்கும் நடந்த மிகப்பெரிய போர் மணிமங்கலத்தில் தான் நடந்தது. இந்திய துணை கண்டத்தில் நடந்த மிகப்பெரிய போர்களில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சேலையூர் ( சிலை + ஊர் ) முன்பு இங்கு சிலைகள் பெருமளவில் செய்த காரணத்தினால் இந்த பெயர் வந்ததாகவும், இந்த பகுதியில் கல்லுகுட்டை உள்ளது, அங்கிருந்துதான் சிலைகள் செய்வதற்கான கற்கள் எடுக்கப்பட்...