Skip to main content

Posts

Showing posts from January, 2023
  தாம்பரம் அகத்தி சார்ந்த இரண்டு குடும்பங்கள் கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்த பள்ளி கல்வியில் இருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளின் இந்திய அளவிலான கூடுகைக்கு ( ஜனவரி 2023 ) சென்று வந்ததின் அனுபவ பதிவு. Un-schoolers meet- The un-schoolers meet was setup in a beautiful location with lots of spaces for the children to play. It is a groomed up space for events and marriage functions. Lined up teak trees, a big pond to go around, a swimming pool overlooking a mango orchard, big lawns sunlit during the morning and evening time. A big hall to have presentation. It is a well-planned space with a view from everywhere. It was a luxury by any standards for a children's event. There were too many sessions at the same time. One has to be picky to attend a particular topics though others might also interest you. Most of the parent we met have started unschooling in the recent times particularly after corona lockdown. In fact the pandemic made the unschooling more appealing for even the middle c...
  தாம்பரம் அகத்தீ குடும்பத்தின் ஒன்று கூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29-1-23) நமது உறவுகளுடன் சங்கர் தோழரின் வீட்டில் நடந்த உரையாடல் மிகவும் நிறைவாக அமைந்தது. சங்கர் தோழரின் மாடித்தோட்டம்- பழ மரங்கள், பூச்செடிகள் மனதை பசுமையாக்கி உரையாடலை ஆரம்பித்து வைத்தன. - நிலம் வாங்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்கள் சேர்ந்து வாங்க விருப்பப்படுவதை பாரதி தோழர் எடுத்துரைத்தார். - வழக்கறிஞர் சங்கர் தோழர் அவர்களின் நிலம் தொடர்பான உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது - ஒரு நிலத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கும் பொழுது அதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. - அகத்தி குழு முக்கியமான அம்சமாக கருதும் கூட்டாக ஒரு நிலத்தில் ஒரு இடம் அமைத்து அதில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது ,விவசாயம் செய்வது மற்றும் பல நிகழ்வுகள் எவ்வாறு மேற்கொள்வது என்பதனை பற்றிய சங்கர் தோழரின் பரிந்துரைகள் மிகவும் உதவிகரமாக அமைந்தது - நமது தோழர்களின் ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் சங்கர் தோழர் பொறுமையாக பதில் அளித்தார் - 21 cent களாக நிலத்தை பிரிப்பது, முழு நேர ஊழியரை நிலத்தில் நி...
  நம் மரங்களை அறிவோம் - சிட்லபாக்கம் ஏரிக்கரை நேற்று மரங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நிகழ்வு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் மாலை ஏற்பாடு செய்யப்பட்டது. மரங்களை அடையாளப்படுத்துவது மட்டும் இல்லாமல், வரலாறு, சங்க இலக்கியம், மருத்துவ குணம், பண்பாடு, வழக்கு மொழியில் அதன் பெயர், பயன்பாடு என்று மிகவும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் திரு ராமன் அவர்கள் விளக்கினார். நெய்தல் திணைக்கான புன்னை மரத்தை காட்டி அதை பற்றி சொல்லும் போது நற்றிணையில் இருந்து ஒரு பாட்டை மேற்கோள் காட்டினார். சிறுவயதில் விளையாட்டாக விதைத்து வளர்ந்த புன்னை மரத்தை காட்டி தன் அம்மா இது உன் தங்கை என்று சொல்லி வளர்க்கிறார். அவள் பெரியவள் ஆனதும் தன் காதலன் உடன் சிரித்துப் பேச புன்னை மரத்தின் நிழலில் அவன் ஒதுங்கும்போது, இது என் தங்கை இங்கு வேண்டாம் என்று அவள் தன் காதலனிடம் நாணத்துடன் சொல்லி வேறு ஒரு மரத்தின் நிழலுக்கு செல்வதாக சங்க இலக்கிய பாடலை மேற்கோள் காட்டினார். இதை கேட்கும் போது மெய்சிலிர்ந்து போனேன். பண்டைய தமிழ்ச் சமூகம் தங்கள் வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் இயற்கையை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரு அழகான உதா...
  பால் - பாலினம் - பாலீர்ப்பு அகத்தீ சார்பாக வானகத்தில் ஒருங்கிணைத்த நாடகப் பட்டறையில் அறிமுகமாகி நெருக்கமான 'நிறங்கள்' அமைப்பின் தோழர்களோடு ஒரு உரையாடலை திட்டமிட்டடோம். (22/01/23). இவர்கள் மாற்று பாலினம் சார்ந்த மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான வேலைகளை முன்னெடுக்கிறார்கள். • நம்மில் எத்தனை பேருக்கு Sex (பால்) & Genderக்கு (பாலினம்) வித்தியாசம் தெரியும் என்ற கேள்வியோடு தொடங்கினார் தோழர் சிவா. • LGBTQIA+ என்றால் என்ன ? • பாலீர்ப்பு எத்தனை வகைப்படும் ? • 'அலி' '9' 'அஜக்' என்ற வார்த்தைகளுக்கு மாறாக "திருநங்கை," "திருநம்பி" என்ற அழகான மதிப்பிற்குரிய பெயர் வந்ததற்கு பின்னால் உள்ள வரலாற்று காரணமும் பின்னணியும் என்ன ? • இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு எப்படி மாற்று பாலினத்தைச் சார்ந்த மக்கள் ஒப்பிட்டலவில் தமிழ்நாட்டில் மதிப்பிற்குரியவர்களாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டனர் ? என்று ஏராளமான கேள்விகளுக்கு பல உதாரணங்களோடு சிறப்பாக விளக்கினர். தான் பெற்ற குழந்தைகளையே வெறுக்கும் அளவுக்கு மாற்று பாலினத்தை சார்ந்த...
  கடந்த சில ஆண்டுகளாக தங்கள் விளைவித்த நஞ்யில்லா காய்கறி, பாரம்பரிய அரிசிகள், வளர்த்த செடிகள் என்று எங்களிடம் பகிர்ந்து கொண்ட சென்னைக்கு அருகில் உள்ள விவசாயிகளை நேரில் சென்று அவர்கள் விவசாயம் செய்யும் நிலத்திலேயே வைத்து பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக திட்டமிட்டது தற்பொழுது தான் நடந்தேறியது. மதுராந்தகம் மற்றும் கயப்பாக்கத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்று வந்தோம் (ஜனவரி 21 சனிக்கிழமை). எங்கள் அருமை நண்பர் திருவேங்கடம் அவர்களின் நாற்றுப் பண்ணையில், பண்ணை குட்டை மிகவும் சிறப்பாக இருந்தது; நீர் சேமிப்புக்கு உதவுவது முதல் மீன் வளர்ப்பு வரை பல தேவைகளை பூர்த்தி செய்கிறது. குறுகிய தூரத்திற்குள் மண் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும், ஒவ்வொரு மண் வகைகளும் வெவ்வேறு பயிர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும் அவர் எங்களுக்கு விளக்கினார். நீர் வாட்டத்தை பற்றியும் புஞ்சை நஞ்சை நிலங்களின் வேறுபாடுகளை பற்றியும் சிறப்பாக விளக்கினார். அவரது நாற்று பண்ணை மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது, மேலும் இது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு சுற்றியுள்ள மிகப்பெரிய மரக்கன்றுகளுக்கான பண்ணை என்று பெருமையுடன் ...
  மருத நிலதிற்கான பயணம் - மதுராந்தகம் 11/01/23 ஒரு சமூகமாக இயற்கைக்கு நெருக்கமாக வாழ்வதற்கான ஒரு முயற்சி. Our proposal draft for land and community Basic Philosophy of the Community - Earth Care, People Care and Fair Share Why we need our own land This land is to break away from a never ending consumeristic and dehumanizing urban lifestyle. This land is to produce our own food, energy that is renewable, create a sustainable eco-system where we co-exist with the nature. This land is where we utilize limited resource from the nature and practice sustainable living to give back to the nature. This land is to create a community which is inclusive regardless of caste, religion and gender which works towards an equitable society. Why we need a community The purpose of the community is to bring the like-minded people to create a livable space in which we would like to live than just exist, to create a zone that would work towards enriching the soil, air, water and us the human beings. Why...