தாம்பரம் அகத்தீ குடும்பத்தின் ஒன்று கூடல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை(29-1-23) நமது உறவுகளுடன் சங்கர் தோழரின் வீட்டில் நடந்த உரையாடல் மிகவும் நிறைவாக அமைந்தது.
சங்கர் தோழரின் மாடித்தோட்டம்- பழ மரங்கள், பூச்செடிகள் மனதை பசுமையாக்கி உரையாடலை ஆரம்பித்து வைத்தன.
- நிலம் வாங்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்கள் சேர்ந்து வாங்க விருப்பப்படுவதை பாரதி தோழர் எடுத்துரைத்தார்.
- வழக்கறிஞர் சங்கர் தோழர் அவர்களின் நிலம் தொடர்பான உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது
- ஒரு நிலத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கும் பொழுது அதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
- அகத்தி குழு முக்கியமான அம்சமாக கருதும் கூட்டாக ஒரு நிலத்தில் ஒரு இடம் அமைத்து அதில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது ,விவசாயம் செய்வது மற்றும் பல நிகழ்வுகள் எவ்வாறு மேற்கொள்வது என்பதனை பற்றிய சங்கர் தோழரின் பரிந்துரைகள் மிகவும் உதவிகரமாக அமைந்தது
- நமது தோழர்களின் ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் சங்கர் தோழர் பொறுமையாக பதில்
அளித்தார்
- 21 cent களாக நிலத்தை பிரிப்பது, முழு நேர ஊழியரை நிலத்தில் நியமிப்பது, கூட்டாக நிலத்தில் ஈடுபடும் பொழுது எவ்வாறு செலவை குறைப்பது போன்ற சிலவற்றை சங்கர் தோழர் எடுத்துரைத்தார்
- குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி பேசி மகிழ்ந்தது வழக்கமான அருமை நிகழ்வு.
- ஆனந்தவல்லி தோழரின் சுவையான மதிய உணவும் , சங்கர் தோழரின் மகன்கள் அஜய், சஞ்சய் இனிமையான உபசரிப்புடன், மனதும் வயிறும் நிறைந்து , புத்துணர்ச்சியுடன் முடித்துக் கொண்டோம். இந்த நிலத்துக்கான பயணத்தில் நிறையவே கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற ஆவலுடன் கிளம்பினோம். நன்றி தாம்பரம் மக்கள் குழு - தோழர் காஞ்சனா
Comments
Post a Comment