Skip to main content

Posts

Showing posts from February, 2019

இரசாயனம் இல்லா வீட்டு - செய்முறை பயிற்சி

       இரசாயனம் இல்லாத வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்வதற்கான செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு       நாம் சாப்பிடும் உணவு மட்டும் அல்ல, நாம் பயன்படுத்தும் அனைத்து வீட்டு உபயோக பொருட்களிலும் இரசாயனம் கலந்து இருப்பதை நாம் அறிவோம், குறைந்தபட்ச நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களிலாவது இரசாயனம் இல்லாத பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கான செய்முறை பயிற்சி மற்றும் அனுபவ பகிர்வுக்கான நிகழ்வு. நாள்  : 24.02.2019 நேரம்: காலை 09.30 to 12.00      இரசாயனம் இல்லா வீட்டு உபயோக பொருட்கள் மட்டும் அணையாடைக்கான செய்முறை விளக்க நிகழ்வில் ஆர்வமாக பங்கெடுத்தவர்களுக்கும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைக்க ஒத்துழைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  https://www.facebook.com/share/v/15hQCzQVkX/ https://www.facebook.com/share/p/1DJHNSaH2X/
  நமக்கான கல்வி எது ? மாற்றுக்கல்வி சாத்தியமா ? குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கும் ? சூழலியல் கல்வியின் அவசியம் வேண்டுமா ? வரும் நாட்களில் இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக நம் அகத்தியில் ஒரு சந்திப்பை திட்டமிடவுள்ளோம். இப்போதுள்ள கல்வி முறை சுயசிந்தனையையும், தனித் திறமைகளையும், கேள்வி கேட்கும் பழக்கத்தையும் அறவே மறுத்து நவீன கொத்தடிமைகளாக நம் குழந்தைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கும் நோக்கத்தோடு இருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இந்த சூழலில் கடந்த 2016 அகத்தியில் நடந்த குழந்தைகளுக்கான இயற்கை வாழ்வியல் கோடை முகாம் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகள் முகாமில் வந்த பெற்றோர்கள் சிலரையும் அகத்தி நண்பர்களையும் இணைத்து கொண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றுக் கல்விக்கான இடங்களாக திகழும் திருவண்ணாமலையில் உள்ள மருதம் பண்ணைப் பள்ளி, சிங்காரப்பேட்டை உள்ள குக்கூ காட்டுப்பள்ளி நாகர்கூடலில் (தருமபுரி மாவட்டம் ) உள்ள புவிதம் பள்ளிக்கு சென்று வந்தோம். பயணத்தில் பங்கெடுத்த எல்லாருக்கும் ஒரு புதிய பார்வையை, குழந்தைகளைப் பற்றியும் கல்வி முறை...

இயற்கை விவசாயமும், முற்போக்கு இயக்கங்கள் பற்றிய அனுபவப் பகிர்வு

       ஐக்கிய அமெரிக்காவில் (USA) இயற்கை விவசாயம், நகர நில மேம்பாடு கூட்டுறவு நில உரிமை அதன் நிர்வாகம், இளைஞர் முன்னேற்றம் போன்ற துறைகளில் செயல்படும் டேனியல் ரேஸ் மற்றும் சிந்து சிவா அவர்களுடன் ஒரு கலந்துரையாடலில் இயற்கை விவசாயம் பற்றியும் முற்போக்கு இயக்கங்கள் பற்றியும் ஒரு விரிவான அனுபவபகிர்வாக இருந்தது. சந்திப்பை ஆக்கபூர்வமாக மாற்றிய அனைத்து நட்புகளுக்கும் மகிழ்ச்சி. https://www.facebook.com/share/p/16BJbD1Cnm/