Skip to main content

தமிழும் இயற்கையும் போட்டிக்கான விவரங்கள்



'தமிழும் இயற்கையும்' - 2025-26
பள்ளி மாணவர்களுக்கான
திறனறிதல் போட்டி

* போட்டியில் பங்கெடுக்கக்கூடிய மாணவர்கள், இதையொட்டி அவர்களை வழி நடத்துகின்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  நிகழ்வு பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணையவும்.

https://chat.whatsapp.com/KdksCAqt5TJ9PMMAS8hABk
 
 
* போட்டிகளில் பங்கு எடுக்க இங்கு பதிவு செய்யவும் :-

 

* படைப்புகளை சமர்ப்பிக்க படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யவும்.

கீழே உள்ள இணைப்பில் உள் செல்லவும் :-


 
File:WhatsApp.svg - Wikimedia Commons தொடர்பு கொள்ள - https://wa.me/919498488645


அறிமுகம்:

தமிழின் இனிமையையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் ஒரு மாபெரும் முயற்சி இது. மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணரும் களமாகவும், சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த 'தமிழும் இயற்கையும்' திறனறிதல் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

பங்கேற்பாளர் பிரிவுகள்:
 
• பிரிவு 'அ':  6வது வகுப்பு வரை இருக்கும் அனைத்து மாணவர்களும்

• பிரிவு 'இ': 7,8 & 9  ஆம் வகுப்பு மாணவர்கள்

• பிரிவு 'உ': 10,11 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள்
 
மூன்று பிரிவுகளுக்கும் தனியாக பரிசு வழங்கப்படும்.

பதிவுக் கட்டணம்:
 
• அரசு & அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை.

• ஒரு கல்வி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கெடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து - ரூ 200/- மட்டும்.

• தனிப்பட்ட முறையில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு - ரூ. 50/- மட்டும்.
 
முக்கிய நாட்கள்:

• பதிவு செய்யக் கடைசி நாள்: 13/01/2026, செவ்வாய்கிழமை

• படைப்புகளை அனுப்பக் கடைசி நாள்: 20/01/2026, செவ்வாய்கிழமை

• போட்டி நடைபெறும் நாள் : 24 சனவரி 2026, சனிக்கிழமை (24/01/2026)
 

இடம் : கிறிஸ்து இராஜா நடுநிலை பள்ளி, கிழக்கு தாம்பரம்

போட்டி விவரங்கள்:

எண்

போட்டி

கால அளவு

விவரங்கள்

1

கட்டுரை

30 நிமிடம்

கொடுக்கப்பட்ட தலைப்புகளில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

2

கதை சொல்லல்

15 நிமிடங்கள்

நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

ஒரு பக்கக் கதையை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். 

3

கவிதை

30 நிமிடங்கள்

நிகழ்வின் போது கொடுக்கப்படும் பொதுவான தலைப்பிலும் கவிதை எழுத வேண்டும்.

போட்டிக்காக கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சொந்தமாகக் கவிதை எழுதி முன்பே அனுப்ப வேண்டும்

4

ஓவியம்

1 மணி நேரம்

வெள்ளை வரைதாள் வழங்கப்படும். மற்ற உபகரணங்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும்.

5

உரைவீச்சு

15 நிமிடங்கள்

கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் பேச வேண்டும்.

6

பாட்டு

10 நிமிடங்கள்

இயற்கை மற்றும் தமிழ் பெருமையை உணர்த்தும் பாடல்களைப் பாட வேண்டும். ( நாட்டுப்புறப் பாடல்கள் / 1980கள் வரை உள்ள திரைப்படப் பாடல்கள்)

7

வினாடி வினா

1 மணி நேரம்

நிகழ்வின் கருவிலிருந்து கேள்விகள் வரும்.

2 பேர் கொண்ட குழு. போட்டிக்குத் திறன்பேசி (Smartphone) அவசியம். 3 சுற்றுகள் நடைபெறும்.

8

நூல் திறனாய்வு

10 நிமிடங்கள்

நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

2 பக்கங்களுக்குள் நூல் திறனாய்வை முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.

9

குறும்படம்

10 நிமிடங்கள்

நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

2 நிமிடக் குறும்படத்தை முன்பே சமர்ப்பிக்க வேண்டும். நிகழ்வின் கருவே தலைப்பு.

10

எதிரும் புதிரும்

10 நிமிடங்கள்

ஒரு தலைப்பில் இரண்டு பக்கம் உள்ள முரண்களையும் பேச வேண்டும்

11

தனித்திறன்

10 நிமிடங்கள்

தமிழும் இயற்கையும் என்ற கருப்பொருளில்

ஒரு நபர் நாடகம் (Mono-acting), மௌன நாடகம் (Mime), மேடை நகைச்சுவை (Stand-up Comedy) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

போட்டிகளுக்கான தலைப்புகள்:

எண்

போட்டி

அனைத்து பிரிவு மாணவர்களுக்கான பொதுவான தலைப்புகள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.

 1

கட்டுரை

பல்லுயிர் ஓம்புதல்

வாழும் நகரங்கள்

எந்த உயிரினமும் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது

உங்கள் ஊர் வரலாறு (எ.கா: தாம்பரம்)

 2

கதை

இயற்கையின் அன்பால் இணைவோம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

இயற்கையும் மனிதனும், முரண்பாடுகளின் முரண்

சொந்தக் கதை :

தமிழும் இயற்கையும் மையப்படுத்தி

 3

கவிதை

'காக்கை குருவி எங்கள் ஜாதி'

'சிறியதே அழகு'

'இந்தபூமி நமக்குச் சொந்தமல்ல'

'நஞ்சில்லாத உழவே தலை'

 4

ஓவியம்

நான் அறிந்த பூவுலகு

சூடாகும் பூமி

நெகிழிப் பூதம்

சென்னை வெள்ளம்

 5

உரைவீச்சு

நீங்கள் அறிந்த சூழல் போராளி (நம்மாழ்வார் தவிர்த்து)

திணைக் கோட்பாடு சொல்லும் வாழ்வியல்

அழிவின் வளர்ச்சியும் வளர்ச்சியின் அழிவும்

தமிழ் இயற்கையின் மொழி

 6

நூல் திறனாய்வு

மறைநீர்

இனி விதைகளே பேராயுதம்

மௌன வசந்தம்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கான நூலை தேர்ந்தெடுக்கலாம்

 7

எதிரும் புதிரும்

இயற்கை விவசாயமும் நவீன விவசாயமும்

நவீன மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும்

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்: தேவையா? இல்லையா?

உணவே மருந்து, மருந்தே உணவு

 

பரிசுகள்:

  •  பங்கெடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழுடன் சூழலியல் சார்ந்த நூல்கள் பரிசளிக்கப்படும்.

  • வெற்றி பெறும் மாணவர்களை, மாதிரி இயற்கை வேளாண் பண்ணை மற்றும் சூழலியல் முக்கியதுவம் வாய்ந்த இடங்களுக்கு இலவசக் களப்பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

  • வெற்றி பெறும் முதல் மூன்று பள்ளிகளுக்கு, பள்ளி வளாகத்தில் காய்கறி / மூலிகை தோட்டம் / நாற்று பண்ணை அமைத்துத் தரப்படும்.

  • சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்குத் தனித் திறன் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு.

  • வெற்றியாளர்களுக்கு நஞ்சில்லாத ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களுக்கான கூப்பன் வழங்கப்படும்.


பாரதி கண்ணன்
ஒருங்கிணைப்பாளர்
94984 88645
 
 
 
இந்தப் பக்கத்தை பகிர, பின்வரும் QR Code ஐப் பயன்படுத்தலாம்.


 

 

Comments