Skip to main content

Posts

Showing posts from May, 2022
  சூழலியல் பயணம் 21 மே 2022, சனிகிழமை உழவி பண்ணை, விக்கிரவாண்டி நகர, நரக வாழ்வியலில் இருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்பும் பாதைக்கு திரும்ப விரும்பும் நண்பர்களுடனான இது போன்ற பயணங்கள் கடந்த எழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம். தொலைத்த மரபு அறிவையும் நஞ்சியில்லாத விவசாயமும், சத்தான உணவின் முக்கியதுவத்தை பற்றியும் மக்களின் தேடல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமில்லாத தலைமுறையும், பணம் பன்னுவதையே குறியாய் வைத்துள்ள நவீன மருத்துவமும் மக்களிடம் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். விக்கிரவாண்டி அனுராதா, நடராசன் தம்பதியர்கள் தன் ஒரே மகனுக்கு நஞ்சியில்லாத உணவை கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக லட்ச ரூபாய் தருகிற வருமானத்திலிருந்து தங்களை விடுவித்து கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாதிரி ஒருங்கிணைந்த 'உழவி'காய்கறி பண்ணையையும் 'ஞாயிறு இயற்கை உழவர் குழுவையும்' உருவாக்கினார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இதை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர். இவர்களை உழவி பண்ணையிலேயே சந்தித்தது மிகப் பெ...
  பனங்காடு அறகட்டளை சூழலியல் பயணம் "இங்கு ஊர்ல எல்லாரும் கள்ளுதான் இரக்குவாங்க. கடுமையான காவல்துறை கெடுபிடி. மாமூலும் வாங்கிட்டு பொய் வழக்கும் பொடுவாங்க. எங்க குடும்பம் அப்போ கள்ளு குடிக்கரது தப்பு என்ற எண்ணத்துல கள்ளுக்கு எதிரானவங்களா இருந்தோம். 2017ல பெரிய வரட்சி விவசாயத்த தொடர முடில. பனை மரம் தான் என் கண்ணுக்கு அப்போ தெரிந்தது. பனை ஓலைளில் பொம்ம செய்து விற்க ஆரம்பிச்ச பிறகு, பதனீர் இரக்கி விக்கலாம்னு முடிவெடுத்தேன். முப்பத்தி ஐந்து வயசுக்கு மேல இருக்கும் எனக்கு, ஊர்ல போய் பனை மரம் ஏர கத்து தாங்க அப்படினா எல்லாரும் சிரிப்பாங்கனு, பனை மேல பாரத்த போட்டு வேண்டிகிட்டு நானே மரம் ஏர கத்துகிட்டேன். காவல்துறையினர் வந்தவுடனே எல்லாரும் பயந்து ஓடும்பொழுது நான் மட்டும் ஓட மாட்டேன். என்கிட்ட வந்து பாத்துட்டு பதனீர் என்பதால, என்ன எதுவும் செய்ய மாட்டாங்க. கருப்பட்டி காய்த்து விற்க ஆரம்பித்தோம். கள்ளு மட்டும் இரக்கிவிக்க நிரபந்திக்கபட்ட காரணதினாலும் பனை பொருட்களின் முக்கியதுவம் மக்களிடையே குறைந்த காரணித்தினாலும் கருப்பட்டி போன்ற பல மதிப்பு கூட்டின பொருட்களை எப்படி செய்வது என்று தெரியாமலேயே வள...
  தோழன் காசி பேராற்றலோடு கலந்து விட்டான் எங்கள் அகத்தி எனும் கம்யூன் (கூட்டு வாழ்க்கை) குடும்பத்தின் அன்புக்குரியவன். வேலைகளை சிரத்தையுடன் செய்யும் உழைப்பாளி. சமூக அவலங்களைக் கண்டு கோபம் கொள்பவன். கள்ளம் கபடமற்ற இளகு மனம் உடையவன். 2017 அன்று எங்களது 500 கி.மீ தொலைவு விழிப்புணர்வு நடைபயணம் முழுவதும் தன்னை ஈடுகொடுத்து உடன் நடந்த இளம் செயற்பாட்டாளன். அவனின் இறப்பு செய்தியை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறது. நடைபயணத்தில் அவன் ஆற்றிய உரைகள், நாங்கள் செய்த சேட்டைகள், ஒன்றாக வீதியில் உறங்கியது, விளையாடியது, அகத்தி நிகழ்வுகளில் அவனின் உழைப்பு, எங்கள் உரையாடல் அனைத்தும் நினைவிற்கு வந்து போகிறது. இந்த இழப்பை நாங்களும், அவன் குடும்பமும், சமூகமும் ஈடுகட்ட முடியுமா தெரியவில்லை. குடும்ப சூழ்நிலைக்காக பொருள் ஈட்டும் வேலைகளில் இருந்த போதும் பொது நிகழ்வுக்காக தன் நேரத்தை எப்போதும் ஒதுக்கி செயல்பட்ட தோழனின் இழப்பின் வருத்தத்தை சொற்களால் சொல்ல முடியாது. இந்த இழப்பிலிருந்து எங்களையும் அவன் குடும்பத்தையும் தேற்றுவதற்கு காலத்தால் தான் முடியும். அதற்கான மனவலிமையை வேண்டுகிறோம். இந்த வருத்தமான சுழலில் சமூகத்திற்கான...