தோழன் காசி பேராற்றலோடு கலந்து விட்டான்
எங்கள் அகத்தி எனும் கம்யூன் (கூட்டு வாழ்க்கை) குடும்பத்தின் அன்புக்குரியவன். வேலைகளை சிரத்தையுடன் செய்யும் உழைப்பாளி. சமூக அவலங்களைக் கண்டு கோபம் கொள்பவன். கள்ளம் கபடமற்ற இளகு மனம் உடையவன். 2017 அன்று எங்களது 500 கி.மீ தொலைவு விழிப்புணர்வு நடைபயணம் முழுவதும் தன்னை ஈடுகொடுத்து உடன் நடந்த இளம் செயற்பாட்டாளன்.
அவனின் இறப்பு செய்தியை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறது. நடைபயணத்தில் அவன் ஆற்றிய உரைகள், நாங்கள் செய்த சேட்டைகள், ஒன்றாக வீதியில் உறங்கியது, விளையாடியது, அகத்தி நிகழ்வுகளில் அவனின் உழைப்பு, எங்கள் உரையாடல் அனைத்தும் நினைவிற்கு வந்து போகிறது. இந்த இழப்பை நாங்களும், அவன் குடும்பமும், சமூகமும் ஈடுகட்ட முடியுமா தெரியவில்லை.
குடும்ப சூழ்நிலைக்காக பொருள் ஈட்டும் வேலைகளில் இருந்த போதும் பொது நிகழ்வுக்காக தன் நேரத்தை எப்போதும் ஒதுக்கி செயல்பட்ட தோழனின் இழப்பின் வருத்தத்தை சொற்களால் சொல்ல முடியாது. இந்த இழப்பிலிருந்து எங்களையும் அவன் குடும்பத்தையும் தேற்றுவதற்கு காலத்தால் தான் முடியும். அதற்கான மனவலிமையை வேண்டுகிறோம்.
இந்த வருத்தமான சுழலில் சமூகத்திற்கான அவன் பங்களிப்பையும் உழைப்பையும் அங்கிகரித்து மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் சேர்ந்து தோழன் காசி குடும்பத்திற்கு நிதிதிரட்டி கொடுக்கலாம் என்று திட்டம். அதே போல் தோழன் காசியை கவுரவப் படுத்தும் விதமாக அடுத்த மாதம் தாம்பரத்தில் ஒரு நினைவேந்தல் கூட்டம் நடத்தவும் திட்டம்.
நிதி உதவிக்கு தோழர் மணி
Gpay : +919840890168
மேலும் தகவலுக்கு
தோழர் பாரதி: 99402 20091
Comments
Post a Comment