Skip to main content

Posts

Showing posts from February, 2020

அகத்தீ - சூழலியல் பயணம்

  சூழலியல் பயணம் மூன்றாவது முறையாக மாற்று பள்ளிக்கூடங்களாக விளங்கும் மருதம் பண்ணைப் பள்ளி, குக்கூ காட்டுப்பள்ளி, புவிதம் பள்ளி, பியூஸ் மனுஷ்யின் கூட்றவு காடு போன்ற இடங்களுக்கு கடந்த சனி ஞாயிறு (22,23) சென்று கண்டு ரசித்து உரையாடி பகிர்ந்து புதிய அனுபவங்களைப் பெற்று மிகுந்த மனநிறைவுடன் இந்த ஆற்றலை பன்மடங்கு பெருக்குவோம் என்ற உறுதியோடு திரும்பினோம். இதே போன்ற அடுத்த பயணத்தை மார்ச் அல்லது ஏப்ரலில் திட்டமிட்டு உள்ளோம் ஆர்வமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் பகுதி மற்றும் தொடர்பு எண்ணை தெரிவித்தால் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

அகத்தீ - காய்கறி தோட்டதிற்கான வேலைகள் - மேட்டு பாத்தி முறை

  இன்று காய்கறி தோட்டதிற்கான வேலைகள் மேட்டு பாத்தி போடப்பட்டது களையை, சரடுகளை எரிக்க வேண்டும், இவை 'குப்பை' வெளியில் போட்டுவிடலாம் என்று பலர் ஒவ்வொரு முறை பலவந்தமாகசொல்லும்போதும் நீண்ட உரையாடலில் ஈடுபட்டு (சிலசமயம் வாக்குவாதத்திலும் சென்றதுண்டு) அப்படி எரித்தால் மண்ணில் உள்ள உயிர் செத்துபோயிவிடும், செத்துவிட்டால் மண் செத்துவிட்டது என்று அர்த்தம். செடிகளுக்கு சத்து குறைபாடு இருக்கும். பல கட்ட போராட்டதில் 2 ஆண்டாக போட்டு வைத்த உர குவியலை விலக்கி பார்த்தபோது எங்கள் போராட்டதிற்கு கிடைத்த பலனாக கருப்பு தங்கத்தை கண்டோம். மண்ணை நேசித்து புரிந்துகொண்ட ஒவ்வொருவருக்கும். கிடைத்த மட்டற்ற மகிழ்ச்சி.

அகத்தீ - இன்று அகத்தியில் ஒரு சந்திப்பு...

  இன்று அகத்தியில் ஒரு சந்திப்பு...

அகத்தீ - இன்று அகத்தியில் ... விளையாட்டு - மகிழ்வோம் வாங்க...!

  இன்று அகத்தியில்...

அகத்தீ - அகத்தி தோட்டம் - அகத்தியில் பச்சை கத்திரி அறுவடை

  அகத்தியில் பச்சை கத்திரி அறுவடை ஒரு வருடதிற்கு மேலாக உள்ள செடி... காய் ஒவ்வொன்றும் மிக பெரிய அளவில். விதைச்சது மட்டும் தான்... எந்த பெரிய பராமரிப்பும் இல்லை. தை பட்டத்தையொட்டி அகத்தியில் மேட்டு பாத்தி போட திட்டம் ஆர்வம் உள்ளவர்கள் பின்னூட்டதில் தங்கள் வருகையை உறுதிசெய்யவும்.