Skip to main content

Posts

தமிழும் இயற்கையும் சங்கமித்த போட்ட போட்டிகள்

  உறுதியாக நம்புங்கள் "மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தே இருக்கிறது. அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டே இருக்கும் உறுதியாக நம்புங்கள்." - வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார். "உங்கள் அகத்தீ குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு பம்பரமாய் சுற்றி செய்த வேலை எங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உங்கள் எல்லோரையும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி, வெறும் வாழ்த்துக்கள் என்று சொல்லி செல்வது பொருத்தமாக இருக்காது. வரும் காலங்களில் உங்களோடு எப்படி இணைந்து பயணிக்கலாம் ? என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது ?" என்று நிகழ்வு நடந்து முடிந்த போது பங்கெடுத்த ஒரு பள்ளியின் தமிழ் ஆசிரியர் நம்மிடம் வந்து கூறியது நம் நோக்கம் நிறைவேறியதின் பெரும் நிறைவை கொடுத்தது. இது நமக்கு கூடுதல் பொறுப்புணர்ச்சியோடு, செயல்படுவதற்க்கான நம்பிக்கையாக இருந்தது. கடந்த சனவரி 25 நடத்தப்பட்ட தமிழும் இயற்கையும் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி நடத்துவதற்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பாக தமுஎகச நடத்திய ...

மாணவர்களுடனான நம் சூழலியல் கற்றல் பயணமும் நினைவு பரிசும்

  தமிழும் இயற்கையும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியும் ..... மொத்தம் 17 பள்ளிக்கூடங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று பிரிவுகளாக 11 போட்டிகளில் பங்கெடுத்தனர். 65 மாணவர்கள் பரிசு பெற்றார்கள். மாணவர்களுக்கான இந்த திறனறிதல் போட்டியை திட்டமிடும் போதே இது தொடர் நிகழ்வுகளுக்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இதன் காரணமாக மட்டுமே பரிசுகளை அதற்க்கு ஏற்றார் போல் திட்டமிட்டோம். ஒரு தலைமை ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் " நீங்கள் அறிவித்திருக்கும் பரிசு சிறப்பாக ஒன்றுமில்லை ஆனால் ஏதோ வித்தியாசமா இருக்கு" என்றார். ஆம் எங்களுக்கு பதக்கங்களும் கேடயங்களும் வழங்குவதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. அதற்கு மாற்றாக திட்டமிடும் போது உதித்த சிந்தனைகளே இவை • அகத்தீக்கு நன்கு அறிமுகமான தாம்பரத்தை சுற்றி உள்ள இயற்கை விளைபொருள் அங்காடிகள் மூலமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அட்டைகளை வழங்கினோம். இதன் மூலம் நேரடியாக கடையில் சென்று மாணவர்கள் பரிசு பொருட்களை பெறும் போது ஏற்படும் உரையாடல்களையும் மிக முக்கியமாக கருதினோம். பரிசு அட்டைகளையும் ச...

வேளாண் சுற்று பயணம் புதியதோர் கற்றல் உலா

  உணவு காடு அறிதல் - கற்றல் பயணம் தமிழும் இயற்கையும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஒரு நாள் சுழலியல் பயணமாக திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள மாதிரி வேளாண் சுற்றுலா இடமான தமிழ் நிலம் தமிழ் பண்ணை உணவுக்காட்டுக்கு கடந்த பிப்ரவரி 15 அன்று அழைத்து சென்று வந்தோம். மொத்தம் 6 பள்ளியில் இருந்து வெற்றி பெற்ற இருபது மாணவர்களுடன், 25 பேர் கொண்ட குழு சென்று வந்தோம். பரிசின் ஒரு பகுதியாக வெற்றி பெற்ற மாணவர்களை இது போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியதன் அடிப்படையில், "தங்கள் இடத்திற்கு வரலாமா ?" என்று கேட்டவுடன், தோழர் இறையழகன் அவர்கள் உடனடியாக நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தார். தமிழ் நிலம் தமிழ் பண்ணைக்குச் சென்றவுடன் குழந்தைகளை கவறும் விதமாக அங்கிருந்து விளையாட்டு பொருட்களை எடுத்து அவர்கள் கூடி விளையாடினார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து டிராக்டர் மூலமாக பண்ணையை சுற்றி காண்பித்தார்கள். பிறகு தோழர் இறையழகன் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ் பண்ணையில் அமைந்துள்ள மரங்கள் மற்றும் இந்த நிலத்தின் வரலாறு என்று பலவற...

மாணவர்களுக்கான சூழலியல் கல்விக்கான ஒரு முன்னெடுப்பு

  மாணவர்களை சென்றடைவோம் ..... கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக அகத்தீ தாம்பரத்தை கடந்து தனது பணிகளை விரிவாக்கும் விதமாக பறந்து பட்ட மாணவர்களை சென்றடைய ஒரு முயற்சியாக கடந்த மாதம் ஜனவரி 30,31 தேதிகளில் வி ஐ டி சென்னை வளாகத்தில் நடந்த சர்வதேச ரோபோடிக்கா நிகழ்ச்சியில் பங்கெடுத்தோம். முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த இந்த நிகழ்வில் அகத்தீயுனுடைய கடந்த கால செயல்பாடுகளை புகைப்படங்களாக வைத்து காட்சிப்படுத்தினோம். அதேபோல் சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவுடன் Chennai Climate Action Group இணைந்து கழிவில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் ஏற்படும் விளைவுகளை விளக்கும்விதமாக புகைப்பட கண்காட்சிகளையும் வைத்தோம். மாணவர்களுக்கு இலவசமாக விதைப்பந்து வழங்கினோம். பூக்களைத் Perumal Theerthavadivel தேடி தேனீக்கள் மொய்ப்பதை போல மாணவர்களை வெகுவாக ஈர்த்த ஒன்றாக பண்டைய ஒலைச்சுவடிகளை போல, பனை ஓலையில் அவர்களின் விருப்பப்பட்ட பெயர்களை லேசர் தொழில்நுட்பம் கொண்டு அச்சிட்டும், எழுத்தாணி மூலமாக எழுதியும் கொடுத்தோம். எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு இருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்து பனை மரத்திற்கும் தமிழ்...