Skip to main content

Posts

Showing posts from July, 2017

அகத்தீ - நன்றி உரை தாம்பரம்

  Thanks to Tambaram talk

அகத்தீ - நம்ம சந்தை

  அகத் தீ - நம்ம சந்தை 9/7/17 நம்ம சந்தை இந்த நிகழ்வை பற்றிய பதிவை வேலைப்பளுவினால் சரியான நேரத்தில் பகிர முடியாமல் போனது. அகத்தி நண்பர்கள் மற்றும் இந்த நிகழ்வில் மூலம் அறிமுகமான தோழர்கள் பெரும் உழைப்பினால் ஜூலை 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல் முறையாக நம் தாம்பரத்தில் அகத்தி தோட்டத்தில் தொடங்கியது. மறத்தமிழன் இசைக்குழு சார்பாக தமிழர்களின் பாரம்பரிய பறை இசையுடன் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பறை இசைக்கு ஏற்ப நடனமாடி குதூகலித்தனர். பிறகு வானகம் மருதம் குமார் அவர்கள் இயற்கை வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். மிகவும் எளிமையாக இந்த பரபரப்பான நகர வாழ்க்கையில் நாம் கவனிக்க மறந்த விஷயங்களை நமக்கு நினைவூட்டினார். வானகத்தில் பயிற்சி பெற்று அங்கு வந்திருந்த தோழர்களை அடையாளம் காட்டி கௌரவித்தார். பிறகு அகத்தியின் உரிமையாளர் ஆடிட்டர் ராஜசேகர் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக குமார் அண்ணா நினைவு பரிசு வழங்கினார். அவரைத் தொடர்ந்து சித்த மருத்துவர் சரவண குமார் அவர்கள் உணவே மருந்து என்ற தலைப்பில் அவருடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு உணவு இடைவ...

அகத்தீ - விதைப்பந்து நிகழ்வு

  அகத் தீ - விதைப்பந்து நிகழ்வு இனிதே தொடங்கியது

அகத்தீ - நம்ம சந்தை & சிறார் களம்

  அகத் தீ - நம்ம சந்தை அகத்தி நம்ம சந்தை இனிதே தொடங்க உள்ளது .. அனைவரையும் வரவேற்கிறோம்.. அகத்தி நம்ம சந்தை / சிறார் களம்-2 ஆகத்து 13 ஞாயிறு 2017 நேரம் : காலை 10 மணி முதல் இடம் : MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் ) கருத்தாளர்கள் : பசுமை பொருளாதாரம் தோழர் பியுஷ் மனுஷ், செயற்பாட்டாளர், சேலம் மக்கள் குழு விவசாயமும் சந்தையும் தோழர் அகிலா பாரதி, புதுகோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் வணக்கம் , கடந்த ஜூலை மாதம் நடந்த அகத்தி - நம்ம சந்தை மற்றும் சிறார்களம் தொடக்க நிகழ்வில் பங்குபெற்று உதவி புரிந்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. பல மகிழ்ச்சியான தருணங்களை கடந்து, பங்குபெற்ற பலர் அடுத்த சந்தை எப்போது என்று கேட்டது அகத்தியின் இந்த முன்னெடுப்புக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் அனைவரின் ஆதரவோடு தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ளோம். அகத்தியில் இந்த முறை 'இனிது' ( Exploring Happiness ) தொடக்கமும் உள்ளது. கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக தொடங்க உள்ளோம். கலையையும் கல...