Skip to main content

 அகத்தீ- நம்ம சந்தை

அகத்தி நம்ம சந்தை இனிதே தொடங்க உள்ளது .. அனைவரையும் வரவேற்கிறோம்..


அகத்தி

நம்ம சந்தை / சிறார் களம்-2

ஆகத்து 13 ஞாயிறு 2017

நேரம் : காலை 10 மணி முதல்

இடம் : MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் )

கருத்தாளர்கள் :

பசுமை பொருளாதாரம்

தோழர் பியுஷ் மனுஷ், செயற்பாட்டாளர்,

சேலம் மக்கள் குழு

விவசாயமும் சந்தையும்

தோழர் அகிலா பாரதி,

புதுகோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்

வணக்கம் ,

கடந்த ஜூலை மாதம் நடந்த அகத்தி - நம்ம சந்தை மற்றும் சிறார்களம் தொடக்க நிகழ்வில் பங்குபெற்று உதவி புரிந்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

பல மகிழ்ச்சியான தருணங்களை கடந்து, பங்குபெற்ற பலர் அடுத்த சந்தை எப்போது என்று கேட்டது அகத்தியின் இந்த முன்னெடுப்புக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் அனைவரின் ஆதரவோடு தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.

அகத்தியில் இந்த முறை 'இனிது' ( Exploring Happiness ) தொடக்கமும் உள்ளது.

கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக தொடங்க உள்ளோம். கலையையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம்.

இயற்கைக்கு திரும்பும் பாதைக்கான அகத்தியின் இந்த முயற்சிக்கு குடும்பத்துடன் அவசியம் வாங்க...

தொடர்புக்கு : 9840890168 ,9940258184


















Comments