Skip to main content

Posts

Showing posts from September, 2017

நம்ம சந்தை - சிறார் களம் - 2 - நிகழ்வுக் குறிப்புகள்

    சீனி தோழர் பதிவு நம்ம சந்தை / சிறார் களம்-2 - நிகழ்வுக் குறிப்புகள்  கடந்த ஆகத்து 13 ஞாயிறு 2017 அன்று கிழக்கு தாம்பரத்தில் 'நம்ம சந்தை / சிறார் களம்-2' என்ற நிகழ்வை தாம்பரம் மக்கள் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 4 வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இடம் : அகத்தி தோட்டம், MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் ). இவ்விடம் வீட்டுக்கு மிக அருகில் இருப்பதால், நான், நித்யா, வியன் மூவருமே சென்றோம். இடத்தில் பெரிய தோட்டம், மரம், செடிகளோடு உள்ளது.  13 கடைகள் இருந்தன. இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்கள், எலுமிச்சை, செக்கு எண்ணை, சோப்பு, பலகாரங்கள், இனிப்புகள், நாட்டு மாட்டு மோர், கீரை, புத்தகங்கள், மண்பாண்டங்கள் என பல்வேறு கடைகள் இருந்தன. ஒரு இளைஞர் தமிழர் தற்காப்புக் கலைகள் பற்றிப் பேசினார். சிலம்பத்தின் சில முறைகளை செய்து காட்டினார். ஒரு சிறுமி தன் சிறு கைகளால் அனைவருக்கும் டாட்டூ வரைந்து விட்டது பேரழகு. பின், 'விவசாயமும் சந்தையும்' என்ற தலைப்பில் புதுகோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின்...