Skip to main content

Posts

Showing posts from December, 2022

அகத்தீ உரையாடல் - 3 நீர் அரசியல் - மறைநீர் - நதிநீர் இணைப்பு சரியா தவறா ?

  அகத்தி உரையாடல் - 3 18 டிசம்பர் 2022 நகரமயமாக்களும் வேகமாக மாறிவரும் நீர்நிலைகளின் பயன்பாடும் பேராசிரியர் முனைவர் சக்திவேல் டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம், சென்னை விவசாயத்திற்கான நீர்ப்பாசன சட்டத்தில் தன் ஆய்வை மேற்கொண்டார். சிட்லபாக்கம் ஏரிக்கரை 9940220091 நகரமயமாக்கல் காரணமாக நீர்நிலைகளின் பயன்பாடு வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. முன்பு ஏரிகளின் பயன்பாடு விவசாயத்திற்கு இருந்தது. இன்று விளைநிலங்கள் வீடாக மாறிய பிறகு ஏரிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு அறுந்துவிட்டது. அதை புதுப்பிக்க சிட்டலபாக்கம் ஏரிக்கான மக்கள் போராட்டம் முன் உதாரணம். https://youtu.be/XCBH0U6kFso நீர் அரசியல் - மறைநீர் தேவைக்கான உற்பத்தியாக இல்லாமல் லாபத்திற்கான உற்பத்தி மிக பெரிய நீர் தாட்டுபாடோடு அழிவுக்கும் காரணமாக அமையும். https://youtu.be/XCBH0U6kFso நதிநீர் இணைப்பு சரியா தவறா ? ஆற்று நீர் கடலில் கலப்பது அதன் உரிமை. பல்லுயிரினம் இப்புவியில் வாழ்வது அதன் உரிமை. இதுவே மனிதன் இருப்பை உறுதி செய்யும். https://youtu.be/Llrsvyrm2WY

அகத்தீ உரையாடல் - 2 புதிய கல்வி கொள்கை பற்றிய ஒரு பார்வை

  அகத்தீ உரையாடல் - 2 கல்வி என்பது வணிக பொருள் அல்ல ! நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை ! புதிய கல்வி கொள்கை பற்றிய ஒரு பார்வை. முன்னால் அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர் சிவகுமார் 04 டிசம்பர் 2022, ஞாயிறு காலை 6.30 மணிக்கு சிட்லபாக்கம் ஏரிகரை ____________ கடந்த ஞாயிறு National Biodiversity Act என்ற சட்டத்தின் முக்கியதுவமும் நடைமுறைபடுத்துவதில் உள்ள சவாலும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் தமிழ்நாடு அரசின் உயிரி பன்மய வாரியதின் உறுப்பினர் பேராசிரியர் நரசிம்மன். ஒவ்வொரு மாநிலமும் உயிரி மேலாண்மை குழுவையும், உயிரி பதிவேட்டையும் அமைக்க வேண்டும். அமைக்காத மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற 10 லட்சம் அபராதம் என்று சொன்ன பிறகே ஊராட்சி வரை அமைத்தார்கள். சமீபத்தில் தான் மதுரையில் அரிட்டாபட்டியை மரபு உயிரி பன்மைய பகுதியாக அறிவித்துள்ளனர். இங்கும் ராஜச்தானில் மட்டுமே, உயர்ந்த மலை பாறைகளில் காணப்படும் கழுகு வகை உள்ளது. கிரனைட் கல் வெட்டுவதால் இப்பறவை இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. மற்ற மாநிலங்களில் மூன்று நான்கு உயிரி பன்மய பகுதியாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஆந்திரா, தெலுங்கானா, கோவா, கா...

சந்தை நம்மாழ்வார் மக்கள் குழு

  சந்தை நமக்குள்ளான ஆற்றலையும், அறிவையும், அன்பையும் பெற்றும் கொடுப்பதற்குமான வெளி. பொருள் விற்பதற்கான வெளி மட்டும் அல்ல... https://m.facebook.com/story.php?story_fbid=10159492791094387&id=720304386&mibextid=Nif5oz

அகத்தீ உரையாடல் - 2 எது கல்வி ? யாருக்கான கல்வி ?

  அகத்தீ உரையாடல் -2 டிசம்பர் 4, 2022. ஓய்வு பெற்ற அரசு கல்லூரி முதல்வர் தோழர் சிவக்குமார் எது கல்வி ? யாருக்கான கல்வி ? என்பதை பண்டைய மனித சமூக வரலாற்றிலிருந்து தொடங்கி பரிணாம வளர்ச்சியில் கற்றலின் தேவையை நடைமுறை வாழ்க்கையோடு பொருத்தி, நாகரிகங்களின் தாக்கத்திலிருந்து கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை கோடிட்டு, காலனி ஆதிக்கத்தின் நீட்சீயில் முதலாளிதுவ சமூகத்தில் கல்வி எப்படி வணிகமாகவும், கல்வி கற்கும் மாணவர்கள் எப்படி பண்டமாக தங்களையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை கூர்மையான உதாரணங்களோடு சிறப்பாக விளங்கினார். இதற்கு பிறகு நடந்த உரையாடல் ஏராளமான விவாதங்களையும், தொழில் நுட்ப மாற்றங்களின் வேகத்தையும் புரிந்து கொள்வதற்கான தொடக்கமாக அமைந்தது. Industry ( Education) 4.0, 5.0 - Data analysis -Artificial intelligence ____________ இன்றைய காலகட்டத்தின் போக்குக்கு கல்வி எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று விவரிகக்க தொடங்கினார் பேராசிரியர். கல்வி என்பது ஒரு தனி மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். விமர்சன அறிவு , கேள்வி கேட்கும் திறன், பகுத்து ஆ...

அகத்தீ காலநிலை ஊர்வலம் பெசன்ட் நகர் கடற்கரை

  Climate Rally https://m.facebook.com/story.php?story_fbid=10159482232579387&id=720304386&mibextid=Nif5oz இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் ஒரு பயிற்சி வகுப்பில் "இந்த உலகமய காலகட்டத்தில அறிவும் உலகமயமாக்கப்படும். இந்த அறிவ பெற்ற அறம் சார்ந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை நோக்கி முன்னேறும் போது அத யாராலும் தடுக்க முடியாது. இத பிடரிக் ஏங்கல்ஸ் சொல்லி இருக்காரு. எனக்கு நம்பிக்கை இருக்கியா கண்டிப்பா நாம் விரும்பிய மாற்றம் வரும்னு.‌.‌.." இத சொல்லி முடித்தவர் குரல் உடைந்து அழுகிறார். இவர் சொன்ன அறத்தை பற்றி நின்று நம்பிக்கையின் விதையாக களமாட முன் வந்த இளைஞர் கூட்டம் ஒருங்கிணைத்த காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எச்சரிக்கும் விதமாக நடந்த பேரணி தான் 'நம்ம சென்னை நம்ம எதிர்காலம்'. சமூக நீதி இல்லாத சூழலியல் நீதியோ சூழலியல் நீதி இல்லாத சமூக நீதியோ அறம் அற்றது என்று பெசன்ட் நகர் கடற்கரையில் முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தோம். எந்த முற்போக்கு அரசியல் களமும் இத்தனை ஆண்டு காலம் செய்யாத செய்ய வேண்டிய சந்திப்பும் உரையாடலும் நிகழ்ந்தது. ஒரு குறிப்பிட்ட சாராரின் பேச்சு பொருளாக மட்டும...