Skip to main content

அகத்தீ காலநிலை ஊர்வலம் பெசன்ட் நகர் கடற்கரை

 Climate Rally

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் ஒரு பயிற்சி வகுப்பில்
"இந்த உலகமய காலகட்டத்தில அறிவும் உலகமயமாக்கப்படும். இந்த அறிவ பெற்ற அறம் சார்ந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை நோக்கி முன்னேறும் போது அத யாராலும் தடுக்க முடியாது. இத பிடரிக் ஏங்கல்ஸ் சொல்லி இருக்காரு. எனக்கு நம்பிக்கை இருக்கியா கண்டிப்பா நாம் விரும்பிய மாற்றம் வரும்னு.‌.‌.." இத சொல்லி முடித்தவர் குரல் உடைந்து அழுகிறார்.
இவர் சொன்ன அறத்தை பற்றி நின்று நம்பிக்கையின் விதையாக களமாட முன் வந்த இளைஞர் கூட்டம் ஒருங்கிணைத்த காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எச்சரிக்கும் விதமாக நடந்த பேரணி தான் 'நம்ம சென்னை நம்ம எதிர்காலம்'.
சமூக நீதி இல்லாத சூழலியல் நீதியோ சூழலியல் நீதி இல்லாத சமூக நீதியோ அறம் அற்றது என்று பெசன்ட் நகர் கடற்கரையில் முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தோம்.
எந்த முற்போக்கு அரசியல் களமும் இத்தனை ஆண்டு காலம் செய்யாத செய்ய வேண்டிய சந்திப்பும் உரையாடலும் நிகழ்ந்தது. ஒரு குறிப்பிட்ட சாராரின் பேச்சு பொருளாக மட்டுமே இருந்த காலநிலை மாற்றத்திற்கான குரல், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குரலாகவும் மாறியது. மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் சென்னை மாநகர துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள மெட்ரோ வாட்டர் தொழிலாளியின் உரையே நிறைவுறையாக இருந்தது.
ஆம் பசுமை வளர்ச்சி என்பது பச்சை பொய்....
- பாரதி கண்ணன்
________












Comments