Skip to main content

Posts

Showing posts from October, 2019
  அகத்தியில் திடக்கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக மக்கும் குப்பைகளை சிறப்பாக கையாள்வதற்கான பசுமை தொட்டி 3.0 நிறுவப்பட்டுள்ளது. இதற்கு மூலகாரணமாக இருந்து, திடக்கழிவு மேலாண்மை சம்பந்தமாக ஆய்வுகள் செய்து அதற்காகவே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கரைத்துக் கொண்ட முகமது இஸ்மாயில் அண்ணனுக்கு எங்கள் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம். திடக்கழிவு மேலாண்மை கருத்துரையும் செயல்முறை விளக்கமும் பற்றிய பகுதி 2 கூடிய விரைவில் நடைபெறவுள்ளது.

கனவு வீடுகளை நோக்கி - சூழலியல் பயணம்

  வீடு பெரும்பாலானோருக்கு மிகப்பெரும் கனவு. சந்தைப் பொருளாதாரம், நகரமயமாக்கல் காரணத்தினால் வீடுகள் கூண்டுகளாக மாறியுள்ளது. நாம் தொலைத்த அறிவையும் வாழ்வியலையும் மீட்டெடுக்கும் முயற்சி பெரும் பணியாகும். இதில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் அவர்களின் துணைகொண்டு வீடுகளை கட்டுவதோ புனரமைப்பதுமே சிறப்பாக அமையும். அதற்கான முயற்சியாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்தோம். இடம் : கூடுவாஞ்சேரி நேரம் : 8.30 am - 1 pm 12 அக்டோபர் 2019 சனிக்கிழமை. நம்மைப்போல மற்ற உயிரினங்களைப் போல வீடுகளுக்கும் உயிர் உள்ளது... அவைகளும் சுவாசிக்கணும் என்று சொன்ன சமூக பணி மாணவி ஸ்ரீமதி இதுபோன்ற முயற்சிகளின் இலக்கு கட்டி முடிப்பது இல்லை... இதுபோன்ற மரபு வீடுகளை கட்டுவதற்கான பயணத்தில் நம்மை முழுவதுமாக கரைத்துக் கொள்வதுதான் உண்மையான இலக்காக இருக்க முடியும். தற்சார்பு வாழ்வியல் பற்றிய புரிதல் பரசபரம் பயனாளிக்கும் வடிவமைக்கும் கட்டுமான கலைஞர்களுக்கும் இருந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் சாத்தியமாகும் என்று சொன்ன அசோக் நம்ம காசையும் கொடுத்துட்டு கட்டுமான பொறியாளர் கிட்ட பயந்து பயந்து க...