Skip to main content

கனவு வீடுகளை நோக்கி - சூழலியல் பயணம்

 


வீடு பெரும்பாலானோருக்கு மிகப்பெரும் கனவு. சந்தைப் பொருளாதாரம், நகரமயமாக்கல் காரணத்தினால் வீடுகள் கூண்டுகளாக மாறியுள்ளது. நாம் தொலைத்த அறிவையும் வாழ்வியலையும் மீட்டெடுக்கும் முயற்சி பெரும் பணியாகும். இதில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் அவர்களின் துணைகொண்டு வீடுகளை கட்டுவதோ புனரமைப்பதுமே சிறப்பாக அமையும். அதற்கான முயற்சியாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

இடம் : கூடுவாஞ்சேரி

நேரம் : 8.30 am - 1 pm

12 அக்டோபர் 2019

சனிக்கிழமை.

நம்மைப்போல மற்ற உயிரினங்களைப் போல வீடுகளுக்கும் உயிர் உள்ளது... அவைகளும் சுவாசிக்கணும் என்று சொன்ன சமூக பணி மாணவி ஸ்ரீமதி

இதுபோன்ற முயற்சிகளின் இலக்கு கட்டி முடிப்பது இல்லை... இதுபோன்ற மரபு வீடுகளை கட்டுவதற்கான பயணத்தில் நம்மை முழுவதுமாக கரைத்துக் கொள்வதுதான் உண்மையான இலக்காக இருக்க முடியும். தற்சார்பு வாழ்வியல் பற்றிய புரிதல் பரசபரம் பயனாளிக்கும் வடிவமைக்கும் கட்டுமான கலைஞர்களுக்கும் இருந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் சாத்தியமாகும் என்று சொன்ன அசோக்

நம்ம காசையும் கொடுத்துட்டு கட்டுமான பொறியாளர் கிட்ட பயந்து பயந்து கெஞ்ச வேண்டிய நிலைமை தான் இன்னிக்கு இருக்கு. இங்க யாரு வீட்டு உரிமையாளர் ? யாரு  பொறியாளர் ? யாரு கூலியாட்கள் என்று வித்தியாசமே தெரியாத அளவுக்கு எல்லாரும் எல்லா வேலையும் செய்யுறீங்க... உங்கள் ஒவ்வொரு குள்ள ஏற்பட்டுள்ள பிணைப்பு ஒரு குடும்பம் போல் உள்ளது என்பதை எங்களால் பார்க்க முடியுது அது ரொம்ப அழகா இருக்கு... என்று சொன்ன வைஷ்ணவி

என்னதான் ஆர்வமும் விருப்பமும் இருந்தாலும் படிப்பு முடித்தவுடன் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மத்தியில் அறத்தை பற்றி நின்று செயல்படும் கிரித்திகா மற்றும் மணி அவர்களை எவ்வளவு பாராட்டினாளும் தகும் என்று முத்துராஜ் அவர்கள் சொன்னது சாதாரன பாராட்டு வார்தைகள் மட்டும் அல்ல தொலைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை மீட்டெடுக்கும் பெரும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான சிறிய அங்கிகாரம். கற்றலுக்கான வெளியை ஏற்படுத்தி கொடுத்த வீட்டின் உரிமையாளர் காசி ராமன் மற்றும் அவர் குடும்பதிற்கு இப்பயணத்தை அழகாக்கியதற்கு நன்றிகள்.

உன் கனவில் உலகமும் கனவு காணுகிறது... உன் செயலில் உலகமும் செய்து கொண்டிருக்கிறது.

















https://www.facebook.com/share/v/16NDZv1nXb/

https://www.facebook.com/share/p/1A9AGGBxc4/

https://www.facebook.com/share/p/1CSzT4agM3/

Comments