ஓமியோபதி மருத்துவ முகாம் "இப்போது தான் முதல் முறையாக ஓமியோபதி மருத்துவம் பற்றி கேள்வி படுகிறேன்" "ஓமியோபதி மருத்துவம் பற்றி கேள்வி பட்டது உண்டு, ஆனால் மருந்து எடுத்து கொண்டது இல்லை" என்று பங்கெடுத்த பலரும் இவ்வாறான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அலோபதி ஆங்கில மருத்துவம் தான் நாம் பரவலாக அறியப்பட்ட மருத்துவ முறை. ஆனால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நமக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளை நம் பாரம்பரிய மற்றும் அலோபதி மருத்துவம் இல்லாத மருத்துவ முறை மூலமாக குணபடுத்த முடியும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியாக தான் ஓமியோபதி மருத்துவம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் கடந்த மாதம் (29 சூன் 2025) முதன் முறையாக நடத்தினோம். தாம்பரத்தைச் சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் அசோக் குமார் மற்றும் அவருடைய குழு சிறப்பாக மருத்துவ முகாமை கொண்டு சென்றனர். பங்கெடுத்த அனைவரும் பயன் பெற்றனர் என்பது சிறப்பம்சமாகும். அடுத்த முகாம் அறிவிக்கும் போது தகவல் பெற விரும்புவர்கள் கீழே உள்ள அகத்தீ வாட்சப் குழுவில் இணையலாம். அகத்தீ 9498488645