Skip to main content

அகத்தீ - மத்திய சித்த ஆய்வு நிறுவனம்

அகத்தீ-- மத்திய சித்த ஆய்வு நிறுவனம்

மலையேற்றத்தில் யோகா
பச்சைமலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (19/07/25) நம் அகத்தீயுடன் இணைந்து தாம்பரம் சானடோரியதில் அமைந்துள்ள மத்திய சித்த ஆய்வு நிறுவனம் இயற்கை சூழலில் யோகாவை முன்னெடுத்தனர். 'வரலாற்று பார்வையில் சூழல் அறிவோம்' என்ற தலைப்பில் கல்வெட்டு ஆய்வாளர் கிழக்கு தாம்பரம் பகுதியைச் சார்ந்த ஜான்சன் வெஸ்லி அவர்களும், 'காலநிலை மாற்றமும் நாம் எதிர்கொள்ளும் சவால்களும்' என்ற தலைப்பில் அகத்தீ ஒருங்கிணைப்பாளர் பாரதி கண்ணன் அவர்களும் சிறப்பு கருத்தாளராக பங்கெடுத்தனர். ஏராளமான சித்த மருத்துவ மாணவர்கள் பங்கு எடுத்தது சிறப்பம்சமாகும்.
சித்தா ஆய்வு நிறுவன பொறுப்பாளர்கள், அகத்தீ சார்பாக முன்மொழிந்த பல யோசனைகளை வரவேற்று அதை சிறப்பாக செயல்படுத்தினர்‌.
* மலையேற்றத்தில் விதைப்பந்து தூவுதல்,
* துணியிலான பதாகைகள், * மலையில் உள்ள நெகிழி குப்பைகளை அகற்றுதல்,
* காகித குவலைகளையும் தவிர்த்து எவர் சில்வர் குவளைகளை வாங்கி பயன்படுத்தியது,
* 'வளம் ஆர்கானிக்' மூலமாக நஞ்சில்லாத இயற்கை உணவை ஏற்பாடு செய்தார்கள்.
* இந்த பரம்பரிய உணவு குறித்தான முக்கியத்துவத்தை பற்றி 'அன்னம்ஆர்கானிக்' சுபா அவர்கள் விளக்கினார்
21/07/25 சனிக்கிழமை அன்று கிறிஸ்துராஜா நடுநிலைப்பள்ளியில் 300 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே சமயத்தில் சிறப்பு யோகா பயிற்சி கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஆய்வாளர் ஜான்சன் வெஸ்லி கூடுவாஞ்சேரி அருகே முதுமக்கள் தாழியில் கண்டெடுத்த ஈராயிரம் ஆண்டு பழமையான அரவைக்கலை அறிவு பரிமாற்றத்தின் வெளிப்பாடாக தாம்பரம் சித்த ஆய்வு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக கொடுத்தோம்.
இதை சிறப்பாக ஒருங்கிணைத்து சென்ற தக்சிணாமூர்த்தி அய்யா அவர்களுக்கும் மற்ற மருத்துவர்கள் ஆய்வாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக ஆய்வு நிறுவன இயக்குனர் அவர்களுக்கும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயற்கையின் அன்பால் இணைவோம் !

அகத்தீ 














































































Comments