சரியாக முன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கனவுகளோடு (2016 ஜனவரி ) இந்த நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினோம். நாங்கள் கூடுவதற்கு பேசுவதற்கு விவாதிப்பதற்கு திட்டமிடுவதற்கு செயலாற்றுவதற்கு கொண்டாடுவதற்கு முழு நிலவன்று கறி சோறு சாப்பிடுவதற்கு என்று எல்லாவற்றுக்கும் நிலம் தேவைப்பட்டது. அப்படி ஒரு நிலத்தை கிணற்றை வயலை மரத்தடியை சில மாதங்களுக்கு முன்பு இழந்த வலியோடு சுற்றித்திரிந்தோம். நிலமே அடிப்படை ! நிலமே எங்கள் வாழ்வு ! நிலம் தான் எல்லாமே ! ஒரு காட்டுச் செடி வளர்வது போல எங்களுடைய செயல்பாடு இருந்தது. குழந்தைகளுக்கான பொங்கல் விழா, சூழலியல் கருத்தரங்கம், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான பரப்புரை, ஏரி பாதுகாப்பு என்று எங்கள் வேலைகளை விரிவாக்கிக் கொண்டே சென்றோம். இதன் தொடர்ச்சியாக வீட்டுத்தோட்டம், விதைபந்து, நஞ்சில்லா விவசாயம் போன்றவற்றுக்கான முன்னெடுப்பை தீவிரமாகினோம். சென்னை மழை வெள்ளம் பல நல்ல உள்ளங்களை இணைந்தது. இந்த நேரத்தில்தான் இந்த நிலம் எங்களுக்கு வசப்பட்டது. எங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் ஒவ்வொருவரும் மனதுக்குள்ளும்...