Skip to main content

Posts

Showing posts from November, 2024

அகத்தீ - சூழலியல் பயணம் - பச்சை மலை ஏற்றம்

  அகத் தீ - சூழலியல் பயணம். கடந்த நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று அகத்தீ ஏற்பாடு செய்திருந்த "நமது கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள்" பயிற்சியின் ஒரு பகுதியாக தாம்பரம் வரலாற்றை தெரிந்து கொள்ள சுற்றுசூழல் பயணம் ஒன்றை மேற்கொண்டோம். இதில் 35 குழந்தைகளும் 30 பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பச்சை மலை ஏற்றம் நாங்கள் அனைவரும் பச்சை மலை அடிவாரத்தில் காலை 7.00 மணிக்கு கூடினோம். கடந்த வாரம் நடைபெற்ற இணையதள வகுப்பில் நண்பர் தமிழ்தாசன், நம்மை சுற்றியுள்ள இயற்கைச் சூழலில் நாம் கவனிக்க வேண்டியவை குறித்து சில அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தார். பச்சை மலையில் அமைந்துள்ள பல்லுயிர், அங்கிருந்து காணப்படும் நீர்நிலைகள், மலைகள் மற்றும் சுற்றியுள்ள ஊர்களை சிறுவர்கள் ஆர்வத்துடன் கவனிக்க அவர்களுக்கு நினைவூட்டினோம். அவர்கள் பார்த்ததை பற்றி சுவாரசியமான உரையாடல் நடந்தது. பச்சை மலையின் பெயர் காரணம் மற்றும் தாம்பரம் வரலாற்றை பற்றி சுருக்கமாக பாரதி பேசினார். நித்யானந்த் அவர்கள் பறவைகள் பற்றி பகிர்ந்து கொண்டார். வெளிநாட்டு பறவைக்கும் உள்நாட்டு பறவைக்கும் உள்ள வேறுபாட்டை கேட்க, குழந்த...

அகத்தீ - இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

  அகத் தீ - முகாம் மிகவும் நிறைவாக அகத்தியின் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் செங்கல்பட்டு அருகில் நென்மேலி கிராமத்தில் கடந்த நவம்பர் 1, 2, 3 தேதிகளில் நடந்து முடிந்தது. காடுகளுக்கு நடுவில் 24 ஏக்கர் பரப்பளவில் 14 வகைகளை உள்ளடக்கிய 400 மரங்கள் உள்ள மாந்தோப்பு ஒரு பகுதியும் மற்றொன்று அருமையான தங்கும் வசதியுடன் இருந்தது முகாம் நடத்திய இடம். பண்ணை வளம் அறிமுக நிகழ்வு மலையற்றம் குளத்துக்கு குளியல் வாசிப்பு வட்டம் ஒலி ஆற்றுப்படுத்துதல் நமக்கான நாடகம் அனுபவ பகிர்வு என்று திட்டமிட்டபடி தீப ஒளி திருநாளை பேரன்பை பகிர்ந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக செலவழித்தோம். தாம்பரம் வட்டாரத்தில் குழந்தைகள், சுற்றுச்சூழல், பயணம், இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் சேரலாம். https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8