Skip to main content

அகத்தீ - இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

 அகத்தீ - முகாம்

மிகவும் நிறைவாக அகத்தியின் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் செங்கல்பட்டு அருகில் நென்மேலி கிராமத்தில் கடந்த நவம்பர் 1, 2, 3 தேதிகளில் நடந்து முடிந்தது.
காடுகளுக்கு நடுவில் 24 ஏக்கர் பரப்பளவில் 14 வகைகளை உள்ளடக்கிய 400 மரங்கள் உள்ள மாந்தோப்பு ஒரு பகுதியும் மற்றொன்று அருமையான தங்கும் வசதியுடன் இருந்தது முகாம் நடத்திய இடம்.
பண்ணை வளம்
அறிமுக நிகழ்வு
மலையற்றம்
குளத்துக்கு குளியல்
வாசிப்பு வட்டம்
ஒலி ஆற்றுப்படுத்துதல்
நமக்கான நாடகம்
அனுபவ பகிர்வு
என்று திட்டமிட்டபடி தீப ஒளி திருநாளை பேரன்பை பகிர்ந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக செலவழித்தோம்.
தாம்பரம் வட்டாரத்தில் குழந்தைகள், சுற்றுச்சூழல், பயணம், இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் சேரலாம்.

Comments