Skip to main content

Posts

Showing posts from December, 2021

அகத்தியின் பாட்டி - வாசிப்பு ஆர்வம்,சிந்தனை,பங்களிப்பு,மறைவு

அகத்தியின் பாட்டி _____________________ "பெரியார் ஒரு முறை கூட்டத்திற்கு எங்கள் வீடு இருக்கும் தெரு வழியாக செல்லும்பொழுது அவருடைய வண்டி பழுதடைந்தது. அதனால் தற்காலிகமாக எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். சிறுவர்களாக விளையாடிக்கொண்டிருந்த நாங்கள் அவரைப் பார்த்தவுடன் பயந்து போய் வீட்டினுள் சென்று ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தோம். தண்ணீர் கேட்ட பொழுது கூட கொடுக்கவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து எங்கள் அப்பா வந்த பிறகு தண்ணீர் கொடுத்தோம். அப்பாவும் பெரியாரும் சிறிது நேரம் சமகால அரசியல் சூழல்கள் பற்றி அளவலாடினர். அப்பா அன்று தமிழகம் அறிந்த காந்தியவாதி (ஜி. சுப்பிரமணியம்). காந்தியுடன் இணைந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர். ஏராளமான நற்குணங்களுக்கு சொந்தக்காரர். எந்தப் பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் யாரிடமும் பார்த்ததில்லை. பெரியாரைப் பற்றி சிறுவர்களாக இருக்கும் போது எங்களுக்கு இருந்த அபிப்பிராயம், அவர் பிராமணர்களுக்கு எதிரானவர் மிகவும் மோசமானவர் என்று நினைத்திருந்தோம். ஆனால் அது எவ்வளவு முட்டாள்தனம் என்பது பிறகுதான் நான் உணர்ந்து கொண்டேன். பெரியார் மற்றும் அம்பேத்கரின் பங்...