காடா கல்லூரியா ? பொதுவாக ஒன்றை பற்றிக் கூற வேண்டுமானால் அதன் வரலாறுதான் முதல்பாகத்தை ஆக்கரமிக்கும் என்பது வழக்கு ; ஆனால் அதனை தவிர்த்து இன்றைய இயற்கை நடைவல அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். MCC கல்லூரி இந்தியாவில் இருக்கும் ஆங்கிலேய மிச்சங்களில் ஒன்று என்பதும் அதில் படிக்க சேர்வது கடினம் என்பதும் இன்றுதான் அறிந்துகொண்டேன். வாயில் காப்போர்களால் "என்ன வேண்டும் ? யார் நீங்கள்?" என்னும் கேள்வியுடன் உள்ளழைத்து; பயண முடிவில் நாம் நன்றி கூறியவுடன் சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்த-அக்கல்லூரியின் வயதையும், விரிந்த வனப்பையும் கண்டு கேட்டவுடன் பிரமிப்பு அடைந்தேன் ஆனால் மான் , மயில், வௌவால் ,கிரீபிள்ளை என ஏனைய விலங்கினங்கள் அங்கு சேர்ந்து படிக்கும்போது என்னால் அங்கு படிக்க முடியவில்லையே என்றெண்ணி பொறாமை கொண்டேன். கட்டிடங்களின் உறுதித்தன்மை அதன் வடிவமைப்பு என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது மேலும் ஆங்காங்கே தனி தனியாக இருக்கும் வீடுகளில் அங்குள்ள ஆசிரியர்கள் வசிப்பதை கண்டவுடன் அவர்களின் துணிச்சல் தான் எனக்கு தெரிந்தது . அதிக நபர்களின் வருகை நம் நடைவலத்திற்கு உற்சாகத்த...