Skip to main content

 சூழலியல் பயணம்

நேற்று செஞ்சி கோட்டை சென்று வந்ததையொட்டி பயணத்தில் பங்கெடுத்த வித்யாராணி அவர்களின் அனுபவ பகிர்வு
தோழர்களுக்கு வணக்கம்,
நேற்யை செஞ்சி கோட்டை பயணம் மிகச் சிறப்பு வாய்ந்த பயணமாகவும் அனுபவமாகவும் இருந்தது. அனுபவத்தை சொல்லும் முன்பே பயணத்தின் வெற்றியை சொல்கிறேன். எனது மூத்த மகள் "அம்மா ராணி கோட்டையும் பார்த்து வந்திருக்கலாம்" என்று என்னிடம் வருத்தப்பட்டாள். அதுமட்டுமில்லாமல் மலையேற்றம் ரொம்ப பிடித்திருந்தது அம்மா என்று கூறி மிகவும் சந்தோஷப்பட்டாள். எனது இளைய மகள் பயணத்தின் முந்தைய நாள் இரவே "அம்மா என்னால் மலையெல்லாம் ஏற முடியாது நீதான் என்னைத் தூக்கிச்செல்ல " என்று சொல்லியிருந்தாள். ஆனால் பயணத்தின் போது அவளால் முடியவில்லை என்றாலும் பெரிதாக என்னை தொந்தரவு செய்யாமல் தனது தோழிகளுடனேயே கோட்டை வரை ஏறி விட்டால். என்மீது அவளுக்கு கோபம் தான் இப்படி ஒன்னுமே இல்லாத மலைக்கு என்னை கூட்டி வந்திருக்கியே என்று. இப்படி கோபப்பட்ட அவளே இரவு படுக்கும்போது என்னிடம் வந்து "வையவன் தோழர் அந்த கோட்டையின் வரலாறு சொன்னாரே அதை எனக்கு சொல்" எனக் கேட்டால். இதுவே இந்த பயணத்தின் வெற்றியாக நன் நினைக்கிறேன். கட்டிடக் கலை நுணுக்கங்களை வையவன் தோழரின் எளிமையான தமிழ் நடையில் கேட்டது இன்னும் சிறப்பு. பசுமையான சூழலின் என் மகள்கள் தனது தோழிகளுடன் நேரம் செலவழித்ததும், கைப்பேசியும், தொலைக்காட்சியும் நினைவுக்கு வராமல், அதை கேட்காமல் முழுநாளும் உடல் அளவிலும் மனதளவிலும். புத்துணர்ச்சியுடன் இருந்தது எனக்கு மனத் திருப்தியை அளித்தது. சுனை என்றால் என்ன என்று கேட்ட என் மகளிடம் நான். சுனையை பற்றியும் அது எப்படி உருவாகிறது என எனக்கு தெரிந்த பதிலை சுனை இருக்கும் இடத்திலேயே நேரில் காண்பித்து கூறினேன் சுனை, ஊற்று இவையிரண்டு வார்த்தையும் நேற்று தான் அவர்கள் முதல் முறையாக கேட்டனர். சுனை நீரின் சுவையும் அதன்
தூய்மையும் நாவிற்கும் தொண்டைக்கும் இதமாக இருந்தது.
காலை சிற்றுண்டி அருமையாக இருந்தது. குரங்குகளின் சேட்டை, மலைகளின் அழகு, மரங்களின் வாசம், சுனை நீரின் சுவை, கோட்டை சுவர்களின் கம்பீரம், மலைமேல் அடித்த சில்லென்ற கற்று, நெற்களஞ்சியம், பீரங்கி, தூக்கு பாலம், ஆயிரங்கால் மண்டபம், அகழி, சிற்பங்கள், கண்காணிப்பு அரை, மதில் சுவர்கள், ஏழடுக்கு பாதுகாப்பு, மலைத் தேன், மலையின் நடுவே இருந்த குளம்,ஆரண்மனை வளாகம், கல்யாண மஹால் இன்னும் பல சொல்லி கொண்டே
இருக்கலாம். தனியாக சென்றிருந்தல் இது சத்தியமில்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு கை வலிக்குது, கால் வலிக்குது, ஏற முடில, பசிக்குது, என்றெல்லாம் சொல்லி ஏன்டா வந்தோம்னு தோன்றியிருக்கும். கூட்டாக வந்ததினால் அவர்கள் வயதையொத்த நண்பர்கள் இருந்ததினால் எந்த கஷ்டமுமின்றி பயணம் செய்ய முடிந்தது. வையவன் தோழரின் வாழ்க்கை முறையும் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் அறிமுகமும் சிறப்பு. செம்மொழி, தமிழ்மொழி ஆகிய இருவரின் வளர்ப்பு பாராட்டுதலுக்குரியது. பயணத்தில் உடன் வந்த நண்பர்களின் ஒத்துழைப்பு, இயற்கை சார்ந்த உரையாடல்கள் எல்லாமே அருமை. எப்பொழுதும் போல தோன்றிய மனகவலை நெகிழிதான். சுனைநீர் இருக்கும் இடத்திலும் கூட நெகிழி பார்த்ததில்தான். மலையின் பசுமை, தூய்மை காக்க நெகிழியையும், தேவையற்ற குப்பைகளையும் போடக்கூடாது என ஒவ்வொருவரும் தானாக முடிவெடுத்து அதை பின்பற்றினால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும். பாரதி கண்ணன் அவர்களுக்கு என் நன்றி. மீண்டும் இதுபோன்ற பயணத்தில் சந்திப்போம், அனைவருக்கும் நன்றி.






























































Comments