அகத் தீ - சிறார் பயிற்சி பட்டறை மிகவும் சிறப்பாக கடந்த பிப்ரவரி 22 & 23 அன்று இரண்டு நாள் குழந்தைகளுக்கான பயிற்சிகள் நடைபெற்றது. பழுதடைந்த மின்னணு பொருட்களை சரிபார்க்க கற்றுக்கொள்ள தொடங்கினார்கள்.... சிறிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வீண்பொருட்களை கொண்டு செய்து பார்த்தார்கள்... குப்பைகளிலிருந்து பயனுள்ள பொருட்களை செய்தார்கள்... தோழர் பெருமாளும் படிமை பாலாவும் சிறார்கள் கற்று கொள்ளவும் செய்து பார்க்கவும் வழிகாட்டினார்கள் முற்றிலும் இந்த புதிய முயற்சிக்கு சிறார்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தது குழந்தைகளின் இரண்டு நாள் ‘பழுது முதல் கலை வரை’ பட்டறை வெற்றி! கடந்த இரண்டு நாட்கள், நம் எதிர்காலச் சிற்பிகளின் கைகளில் பழைய பொருட்கள் புதிய கலைப் படைப்புகளாக உருமாறியதை கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்! "பழுது முதல் கலை வரை" பட்டறையில், ஒவ்வொரு நாளும் 15 குழந்தைகள் கலந்து கொண்டு, பழைய பொருட்களுக்குப் புத்துயிர் அளிக்கும் அற்புதக் கலையைக் கற்றுக் கொண்டனர். இது வழக்கமான கைவினைப் பயிற்சி மட்டுமல்ல. மின்சாரம் மற்றும் மின்னணுப் பொருட்களின் அடிப்படைகளை...