Skip to main content

Posts

Showing posts from November, 2019

அகத்தீ - விதைபந்துகளை கையில் எடுப்போம் !

  விதைபந்துகளை கையில் எடுப்போம் ! விதைப்பந்து இன்று பரவலாக நாடு முழுவதும் அறியப்பட்டு மக்கள் அதை கையில் எடுப்பதற்கு மிக முக்கிய காரணம் தோழன் ஜனகன் @janakan. இதில்'அகத்தி' தோட்டத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் விதைப்பந்துகள் பற்றிய கேள்விகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கும் சூழலில், எந்த புரிதலின் அடிப்படையில் விதைய்பந்துகளை கையில் எடுத்தோம் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம். விதைப்பந்து வளருமா வளராதா நம் நிலப்பரப்புக்கு அது தேவையா இல்லையா, பொருந்துமா பொருந்தாதா என்பதை அனுபவத்திலிருந்து அதன் சரி தவறுகளை புரிந்து பகிர்ந்து கொள்வது அவசியம். ஆனால் மரங்களை வளர்ப்பதில் விதைபந்துகளே தீர்வு என தட்டையாக புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களும் கிராமங்களில் இதை வரட்டுத்தனமாக நடைமுறைப்படுத்துவதும் இன்றைய சூழலில் விதைபந்துகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஏன் விதைப்பந்துகளை தொடர்ச்சியாக கையில் எடுக்க வேண்டும் என்றால் ? மண்ணை தொடுவது கெட்ட பழக்கம் கிருமிகள் வரும், அது அழுக்கு என்று ஆழமாக நகரங்கள் என்னும் நரகங்களில் ...

மிதிவண்டி பயணம் முதல்கட்ட திட்டமிடல் கூட்டம் வானகம் நோக்கி

  இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் நினைவையொட்டி வானகம் நோக்கிய மிதிவண்டி பயணத்திற்கான முதல்கட்ட திட்டமிடல் கூட்டம் இன்று காலை நடந்தது. தொடர்ச்சியாக நான்காம் ஆண்டு பாதுகாப்பான தமிழகத்திற்காக முன்னெடுக்கும் மக்கள் சந்திப்பு இயக்கமான இப்பயணம் இளம் தலைமுறையின் உற்சாக பங்கெடுப்பாள் பெரும் நம்பிக்கை அளிப்பதாக இன்று அமைந்தது.

திடக்கழிவு மேலாண்மை சவால்களும், தீர்வுகளும் - 2

  தெருவெங்கும் உரம் (எரு) உருவாக்குவோம் ! பங்கேற்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய, மக்குவதை வேகப்படுத்தி துர்நாற்றத்தை போக்கும் நன் திறன்மிகு நுன்மிகள் உலை  வழங்கப்பட்டது. 17 நவம்பர் 2019, ஞாயிறு மாலை 3 மணி அகத்தி தோட்டம். அகத்தி தோட்டத்தில் நடந்த திடக்கழிவு மேலாண்மை சவால்களும் தீர்வுகளும் பற்றிய நிகழ்வு சிறப்பாக அமைந்தது. https://www.facebook.com/share/p/12JBwzKQLh7/ https://www.facebook.com/share/p/18tPnmxBkt/

சூழலியல் பயணம் : பிச்சாண்டி குளம் காடு

  சூழலியல் பயணம்: பிச்சாண்டி குளம் காடு • மண்ணின் மரங்களைக் கொண்டு உருவாக்கிய காடு • கிராமப் பெண்களின் துணைகொண்டு சிறப்பாக செயல்படும் மூலிகை மற்றும் நாற்று பண்ணை • பண்ணைக் குட்டை, காற்றாலை கொண்டு சிறப்பாக அமைந்துள்ள நீர் மேலாண்மை. இதைக் கொண்டு செய்யும் நஞ்சில்லா விவசாயம் • புயலில் விழுந்த மரங்களை கொண்டும் பயனற்ற பொருட்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ள சூழலியலுக்கு ஏற்ப வீடுகள் • சூழலியல் கல்வி மூலம் அரசு பள்ளிக்கூடங்களை மாதிரி கற்றல்  வெளியாக பலப்படுத்தியது. • பல்லுயிரின பாதுகாத்தலும் அதை முறையாக ஆவணப்படுத்தியதும். என்று இவையெல்லாம் ஒருசேர அமைந்துள்ள முன் மாதிரி பகுதியாக திகழுகிறது மரக்காணம் அருகில் உள்ள நடுகுப்பம் கிராமம். இது ஆரோவில்லில் இயங்கிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனமான பிச்சாண்டி குளம் காடுகள் அமைப்பின் முன்னெடுப்பாகும். இப்பகுதிக்கும் பிச்சாண்டி குளம் காட்டிற்க்கும் சூழலியல் கற்றல் பயணமாக கடந்த 16 நவம்பர் 2019, சனிக்கிழமை தாம்பரத்தில் இருந்து சென்று வந்தோம்.  பிச்சாண்டி குளம் காடு அமைப்பின் முன்னெடுப்பை பற்றிய சிறு குறிப்பு மரக்காணம் அருகே விழுப்புரம் மாவட்டத்தை சே...

வார்லி ஓவியங்களுக்கான கற்றல் பயிற்சி

  வார்லி ஓவியங்களுக்கான கற்றல் பயிற்சி __________________________________________ இயற்கையுடன் பிணைக்கும் மத்திய இந்திய பழங்குடி மக்களின் வார்லி ஓவிய முறைபற்றிய வரலாற்று அறிமுகமும் செயல்முறை பயிற்சியும் விளக்கமும். கலையையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம் ! காலை 9 மணி - மதியம் 12 மணி வரை 9 நவம்பர் 2019 சனிக்கிழமை அகத்தி தோட்டம் MES 1வது தெரு கிழக்கு தாம்பரம், சென்னை 59 BSNL அலுவலகம் அருகில் முன்பதிவுக்கு அழைக்க : 9940220091, 9940209801 கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம் ! வார்லி ஓவியம் (Warli painting) என்பது இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். இந்த ஓவியக் கலைக்கும் இந்தியாவின் பிற வட்டார ஓவியக் கலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த வார்லி ஓவியக் கலையில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவதில்லை; மேலும் இதில் இந்து மதச் சடங்குகளோ வழிபாடுகளோ இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு. இது தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ளது. வார்லி ஓவிய பயிற்சி அகத்தியி...

அகத்தீ - வீட்டு காய்கறி தோட்டம்

  இந்த ஆண்டு (2019) ஏற்பட்ட மிகப்பெரும் வறட்சியும் அதனைத் தொடர்ந்து மழையும் அகத்தியில் எந்த ஒரு முறையான திட்டமிடளுக்குள் செல்லமுடியாமல் இருந்தது. இந்த சூழலில் சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் முடித்த தோழன் அருளின் தொடர் முயற்சியால் கடந்த ஒரு மாதமாக அகத்தியில் முளைத்துள்ள தாவரங்களை அடையாளப்படுத்தி முறையாக ஆவணப்படுத்தியும் சிறிய அளவு காய்கறி தோட்டத்திற்கான முதற்கட்ட பணியாக களை எடுத்து, கையால் உழுது, கீரைகளை விதைத்தும் உள்ளோம். வரும் நாட்களில் கையை கரையாக்கவும் மனதை இதமாக்கவும் விரும்புவர்கள் அகத்தியோடு இணையலாம் ! வீட்டு காய்கறி தோட்டத்திற்கான தொடர் பயிற்சிகள் திட்டமிட்டுள்ளோம். தொடர்பு கொள்ள: 9940220091