வார்லி ஓவியங்களுக்கான கற்றல் பயிற்சி
__________________________________________
இயற்கையுடன் பிணைக்கும் மத்திய இந்திய பழங்குடி மக்களின் வார்லி ஓவிய முறைபற்றிய வரலாற்று அறிமுகமும் செயல்முறை பயிற்சியும் விளக்கமும்.
கலையையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம் !
காலை 9 மணி - மதியம் 12 மணி வரை
9 நவம்பர் 2019 சனிக்கிழமை
அகத்தி தோட்டம்
MES 1வது தெரு
கிழக்கு தாம்பரம், சென்னை 59
BSNL அலுவலகம் அருகில்
முன்பதிவுக்கு அழைக்க :
9940220091, 9940209801
கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம் !
வார்லி ஓவியம் (Warli painting) என்பது இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். இந்த ஓவியக் கலைக்கும் இந்தியாவின் பிற வட்டார ஓவியக் கலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த வார்லி ஓவியக் கலையில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவதில்லை; மேலும் இதில் இந்து மதச் சடங்குகளோ வழிபாடுகளோ இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு. இது தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
வார்லி ஓவிய பயிற்சி அகத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அகத்தியில் நடந்த வார்லி ஓவிய பயிற்சியின் முடிவில் பங்கெடுத்தவர்கள் வரைந்தவை....
கலைகள்யாவும் பல்லுயிர் சூழலின் மேம்பாட்டுகே !
இயற்கையின் பேராற்றலே இப்புவியின் மையம், மனிதர்கள் அல்ல !
கடந்த சனிக்கிழமை வார்லி ஓவியத்திற்கான பயிற்சி தோழர் பர்வதவர்தினியின் வழிகாட்டுதலில் நடந்தேறியது. வரக்கூடிய நாட்களில் இதுபோன்ற மண்சார்ந்த கலைகளுக்கான பயிற்சிகளும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அகத்தியோடு இணையலாம்.
Comments
Post a Comment