இயற்கைக்கு திரும்பும் பாதை கடந்த ஆண்டு 2025 ஏப்ரல் மாதம் மாணவர்கள் இடையே இயற்கையை மையமாக வைத்த பயிற்சிகளை கொண்டு சேர்ப்பதின் ஒரு பகுதியாக மேற்கு தாம்பரம் சான் அகாடமி உடன் இணைந்து கோடை பயிற்சி வகுப்புகளில் அகத்தீ பங்கெடுத்தது. முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த இந்த பயிற்சி வகுப்பு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடைய இயற்கை பற்றியான ஆர்வமும் வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை விளக்கும் விதமாக இருந்தது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே இயற்கை பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் மிக குறைவாக உள்ளதையே இது காட்டியது. அதைத்தொடர்ந்து நமது தகையில் விதைப்பந்து செய்வதற்கான நிகழ்வு சிறப்பாக நடந்தது. இந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக பெருவாரியான பள்ளி மாணவர்கள் இடையே இயற்கை மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வுகளை கொண்டு போய் சேர்ப்பதற்கு பெரும் உழைப்பை கோருவதாக இருந்தது சமீபத்தில் அகத்தீ ஒருங்கிணைத்த தமிழும் இயற்கையும் நிகழ்வு.