அகத் தீ -- சூழலியல் பயணம் கடந்த மாதம் மே 2 சூழலியல் பயணமாக திருக்கழுக்குன்றம் அருகில் இறையழகன் ஐயா அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணைக்கு சென்று வந்த பயண அனுபவம். அன்புடையீர், நாம் அனைவரும் கலந்து கொண்ட தமிழ் நிலம் தமிழ் பண்ணை வேளாண் சுற்றுலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியதையும் கொடுத்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சேற்று குளியல்,மழை குளியல்,பண்ணை வளம் வருதல், இறையழகன் அய்யா,மற்றும் தோழர் பாரதி ஆகியோரின் உரை நம்மை அறிவுப்பசிக்கும், ஆனந்தத்திற்குமிட்டு சென்றது. குழந்தைகளுக்கு இருக்கும் இன்றைய கல்வி முறையின் மன அழுத்தத்திலிருந்து விடுப்பட்டதை பெற்றோர் உணர வேண்டும். வாழ்க்கை கல்வியை கற்கும் வாய்ப்பும்,இயற்கையின் இதமான சூழலை அனுபவிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் செலவை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செலவிட்டு குழந்தைகள் மற்றும் நம் ஆரோக்கியம் மற்றும் அறிவை வளர்க்க சூளுரைப்போம். இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் உருவாக்கி சென்ற அய்யா இறையழகன் போன்ற எண்ணற்ற சீடர்களின் முயற்சிகளுக்கு தோள் கொடுப்போம். வாழ்க நம்ம...