அகத்தீ--சூழலியல் பயணம்
கடந்த மாதம் மே 2 சூழலியல் பயணமாக திருக்கழுக்குன்றம் அருகில் இறையழகன் ஐயா அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணைக்கு சென்று வந்த பயண அனுபவம்.
அன்புடையீர், நாம் அனைவரும் கலந்து கொண்ட தமிழ் நிலம் தமிழ் பண்ணை வேளாண் சுற்றுலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியதையும் கொடுத்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சேற்று குளியல்,மழை குளியல்,பண்ணை வளம் வருதல், இறையழகன் அய்யா,மற்றும் தோழர் பாரதி ஆகியோரின் உரை நம்மை அறிவுப்பசிக்கும், ஆனந்தத்திற்குமிட்டு சென்றது. குழந்தைகளுக்கு இருக்கும் இன்றைய கல்வி முறையின் மன அழுத்தத்திலிருந்து விடுப்பட்டதை பெற்றோர் உணர வேண்டும். வாழ்க்கை கல்வியை கற்கும் வாய்ப்பும்,இயற்கையின் இதமான சூழலை அனுபவிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் செலவை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செலவிட்டு குழந்தைகள் மற்றும் நம் ஆரோக்கியம் மற்றும் அறிவை வளர்க்க சூளுரைப்போம். இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் உருவாக்கி சென்ற அய்யா இறையழகன் போன்ற எண்ணற்ற சீடர்களின் முயற்சிகளுக்கு தோள் கொடுப்போம். வாழ்க நம்மாழ்வார், வளர்க அவரது வேட்கை. இயற்கையை நேசிப்போம். நல்வாழ்வு வாழ்வோம். நல் உணவு மற்றும் நல் உணர்வும் அளித்த அய்யா இறையழகன் மற்றும் அகத்தீ அமைப்பின் தோழர் பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி.
- ராசசேகரன், சிட்லபாக்கம்.
Visit to Tamizh Nilam - Tamizh Pannai with the Agathi community was an incredibly refreshing experience.
It was heartwarming to see every adult rediscover their inner child as we all played tug of war in the muddy fields, followed by a delightful rain bath, swinging joyfully, and splashing around in the pool. Enjoyed tractor ride and the delicious food was the perfect way to refuel after all the fun.
We are deeply grateful to Iraiyalagan iyya and his dedicated team for their commendable efforts in growing a forest and educating us on the invaluable practices of traditional farming.
A big thank you to our wonderful @Bharathi Kannan tholar for organizing this unforgettable trip. We sincerely hope he continues to lead the Agathi community on many more adventures to farms and forests 
- மாதவ் ராஜ்
இந்த நிகழ்வில் நான் பங்கெடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது, என்றாலும் என் குழந்தைகளின் என்ன ஓட்டங்களை கேட்டு அறிந்தேன், அவர்களின் அனுபவங்களை அவர்கள் மனதில் இருக்கும் உணர்வுகளை அறிந்து இங்கு கருத்தாய் தெரிவித்தால் இந்த நிகழ்வுகளை நல்ல நோக்கத்தோடு முன்னெடுத்துச் செல்லும் தோழர்களுக்கு ஊக்கமாய் அமையும் என்பதன் அடிப்படையில் இங்கு குழந்தைகளின் மனம் பிம்பமாய் தெரிவிக்கிறேன்.
முதல் அனுபவமாய் அனைவருடனும் நட்பாய் இணைந்து பகிர்ந்து உண்ணும் அனுபவம், அனைத்து குழந்தைகளுக்குமாய் இணைந்து அங்கு அமைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி ஒன்று சேர்ந்து விளையாடிய அனுபவம், பண்ணை உரிமையாளர் இறையழகன் ஐயா மற்றும் பண்ணை பராமரிப்பவர்கள் உடன் அறிமுக உரை மற்றும் கலந்துரையாடல், தமிழ் பண்ணை பற்றி இதில் முக்கியமாக தகவலாக தெரிவிக்கப்பட்டது ஒரு ஏக்கரில் 1000 ஆயிரம் மரம் என 15 ஏக்கரில் 150 க்கும் மேற்பட்ட 15,000 மரம் நிறைந்த பசுமையான காடாக தெரிந்தன என உணரப்பட்டது, மேலும் அந்தப் பண்ணை சார்ந்து சுவாரசியமான தகவல்களும் பகிரப்பட்டன, சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு புதுமையான நிகழ்வான சேற்று குளியலை அனுபவித்து மகிழ்ந்தனர். ஊஞ்சலுடன் கூடிய குளியல் மழையை அனுபவித்து மகிழ்ந்தனர். விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பம்பு தொட்டியில் குளித்து மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து மதிய உணவு பரிமாறப்பட்டது.
All Species Leaf அனைத்து நறுமுகனங்களுடன் கூடி விளையும் இலை காண்பிக்கப்பட்டது அந்த இலையின் நறுமணங்கள் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் போன்ற பல நறுமணங்கள் உணரப்பட்டது.
Tractor வண்டி சவாரி புதுமையான அனுபவமாய் இருந்தது.
1970 மற்றும் 80 களில் பிறந்த குழந்தைகள் தத்தம் பாட்டி தாத்தாக்களுடன் கிராமங்களில் வசிக்கும் வீடுகளுக்கு சென்று கோடையை இன்பமாய் கழுத்திருப்போம், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த *தமிழ் (காடு) பண்ணை* கிராமத்து தாத்தா/ பாட்டி வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாய் கழித்த ஒரு அனுபவத்தினை வழங்கியதாக குழந்தைகள் உணர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியினை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் அனுபவித்து மகிழ ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த *தோழர் பாரதி கண்ணன்* அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
- ஜெய், சிட்லபாக்கம்
A gratitude note from Abinaya!
Vanakkam!
It was a journey started with little early than children usually start their day! It was wonderful to step out at once they get up. it was that lovely; waiting for a gang to travel along; accepting one another's normalities and abnormalities; knowing we are not judged here – an awesome feel to dwell upon. We boarded at Kandigai and travel started for children. They were with themselves for some time then dozed off. Breakfast was homemade and filled our stomach well. The environment was completely opposite to urban look. The efforts were evident on how a barren land was transferred into a pile of variety of lives.
We have known Iraiazhagan ayya through Nammazhvaar ayya works years ago. The continuous efforts put for years to make food forests and activities around are commendable. Efforts can be made but the consistency makes a difference. Even after making it completely established, his efforts for next level once a level is reached is making the food forest lively(planting the shade friendly peppers, cocoa) – I admired how a human can make an obstacle/stagnancy as a stepping stone. His complete presence in engaging us along with his family has made the flow effortless and mutually benefitted. Nature is a wonderful place for everybody – such a way it was curated in food forest. Not all parts have been ignored and some parts have been taken care well. It is a learning for everybody where to keep an eye and what to let go. The place nurtured an elderly person and small child equally but in different terms. Children utilized the space wholesome – able to spot difference of opinions among children, the way they handle the differences, their tackling techniques and much more. They are quite thoughtful than us and such nature provide adults a mental space to understand them and us! Thanks for the trip which was a long time wait for me to visit Thirukazhukundram Tamizh pannai! God bless everybody!
Comments
Post a Comment