Skip to main content

Posts

Showing posts from January, 2026

மாணவர்களுக்கான சூழலியல் கல்விக்கான ஒரு முன்னெடுப்பு

  மாணவர்களை சென்றடைவோம் ..... கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக அகத்தீ தாம்பரத்தை கடந்து தனது பணிகளை விரிவாக்கும் விதமாக பறந்து பட்ட மாணவர்களை சென்றடைய ஒரு முயற்சியாக கடந்த மாதம் ஜனவரி 30,31 தேதிகளில் வி ஐ டி சென்னை வளாகத்தில் நடந்த சர்வதேச ரோபோடிக்கா நிகழ்ச்சியில் பங்கெடுத்தோம். முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த இந்த நிகழ்வில் அகத்தீயுனுடைய கடந்த கால செயல்பாடுகளை புகைப்படங்களாக வைத்து காட்சிப்படுத்தினோம். அதேபோல் சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவுடன் Chennai Climate Action Group இணைந்து கழிவில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் ஏற்படும் விளைவுகளை விளக்கும்விதமாக புகைப்பட கண்காட்சிகளையும் வைத்தோம். மாணவர்களுக்கு இலவசமாக விதைப்பந்து வழங்கினோம். பூக்களைத் Perumal Theerthavadivel தேடி தேனீக்கள் மொய்ப்பதை போல மாணவர்களை வெகுவாக ஈர்த்த ஒன்றாக பண்டைய ஒலைச்சுவடிகளை போல, பனை ஓலையில் அவர்களின் விருப்பப்பட்ட பெயர்களை லேசர் தொழில்நுட்பம் கொண்டு அச்சிட்டும், எழுத்தாணி மூலமாக எழுதியும் கொடுத்தோம். எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு இருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்து பனை மரத்திற்கும் தமிழ்...

பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டிகள் தமிழும் இயற்கையும்

அகத் தீ -   பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி அகத்தீ நடத்திய 'தமிழும் இயற்கையும்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டிக்காக ஏனைய தலைப்புகளை எழுதி எழுதி திருத்திய பின்பு தமிழும் இயற்கையும் என்ற தலைப்பு மட்டுமே மிகவும் ஆழமான பொருள் மற்றும் பொருத்தம் உடையது என்று எண்ணி இறுதி செய்யப்பட்டது. இந்த நிலப்பரப்பில் தமிழும் இயற்கையும் ஒன்றை ஒன்று சார்ந்து, பின்னி பிணைந்து பரிணமித்ததின் விளைவாக மனித குலத்திற்கான வாழ்வியல் ரகசியங்களையும் வழிகாட்டுதலையும் அள்ளி வழங்கி உள்ளது. ஆனால் இன்றைய காலச் சூழலில் இவை இரண்டை விட்டும் நாம் விலகிச் சென்றுள்ளோம். இதனை குறிப்பிட்டு கூற வேண்டும் எனில் தூய தமிழ் உரையாடலை கிண்டல் அடிப்பதில் தொடங்கி, தினமும் வீட்டிற்கு வாங்கி வரும் நெகிழிப்பை வரை கூறலாம். எனவே இவை குறித்து ஏ னையோர் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்து வந்தாலும், அகத்தீயும் இப்பெரு முயற்சியில் தனக்கான பங்களிப்பை நீண்ட காலமாக முன்னெடுத்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தான் பள்ளிக் குழந்தைகளிடம் இதனைக் கொண்டு செல்ல கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக முயற்சித்து திட்டங்களை தயாரித்...

தமிழும் இயற்கையும் போட்டிக்கான வரவேற்பு அழைப்பு

  *அன்புடன் வரவேற்கிறோம்* அகத்தீ சார்பாக, 'தமிழும் இயற்கையும்' என்ற தலைப்பில் வரும் சனவரி 24 சனிக்கிழமை, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை கிழக்கு தாம்பரம் கிறிஸ்து இராஜா நடுநிலைப் பள்ளியில் நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக அகத்தீயின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளில் பங்கெடுக்கவும் செய்த அனைவரையும் இத்தருணத்தில் அன்புடன் வரவேற்கின்றோம். *நிகழ்வின் விபரங்கள்:* - *பங்கேற்பு:* 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள் - *போட்டிகள்:* பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் ஒரே நாளில் நடத்தி அதற்கான சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்குகிறோம் - *உணவு:* ஆசிரியர்கள், நடுவர்கள், தன்னார்வலர்களுக்கான மதிய உணவு, பிற்பகல் மாணவர்களுக்கான சிற்றுண்டி என்று திட்டமிட்டுள்ளோம் *உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்:* - *பங்கேற்பு:* போட்டி நடுவராகவும், தன்னார்வலராகவும் பங்கெடுக்க உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின் அவசியம் எங்களை தொடர்பு கொண்டு நிகழ்வுக்கு வலுசேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். - *நன்கொ...